‘சின்ன கலைவாணர்’ எனப் போற்றப்பட்ட பகுத்தறிவாளர் நடிகர் விவேக் (Actor vivek), லஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை நகைச்சுவை மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இவர் 1961 நவம்பர் 19 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தார். எம்.காம் பட்டதாரியான விவேக், போட்டித்தேர்வில் வெற்றிப்பெற்று, சென்னை தலைமைச் செயலகத்தில் பணியமர்ந்தார். அரசுப் பணியில் இருந்து கொண்டே, சினிமாவில் தனது அடுத்த இன்னிங்கஸை தேடி கொண்டிருந்தார்.
1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்க வந்த அவர்,புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். 200 படங்களுக்கும் அதிகமாக நடித்து முடித்த விவேக், வெள்ளைப் பூக்கள் , நான் தான் பாலா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.தமிழ் சினிமாவில் அவரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு நடிகர் விவேக்கிற்கு கலைவாணர் விருது வழங்கியது. 2009ஆம் ஆண்டு மத்திய அரசு சினிமாத்துறையில் அவரது சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சத்தியபாமா பல்கலை கழகம் நடிகர் விவேக்கிற்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இவர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி 17 ஏப்ரல் 2021 அதிகாலை 4.30 மணிக்கு காலமானார்.இவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.Read More
நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்ற விவேக் மனைவியின் கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததற்கு திரையுலகினரும் ரசிகர்களும்…
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்டேலா, நடிகர் விவேக் மரணத்துக்கு எழுதியுள்ள இரங்கல் பதிவு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் நெஞ்சத்தை உருக்குவதாக அமைந்துள்ளது.
பிரபல சீரியல் நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, நடிகர் விவேக் மரணத்தை நினைத்து வருந்தி, “ஹ்ம்ம்… எப்போ இருப்பா யாரு போவாங்கனேதெரியலையே… இன்னிக்கி உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம்…
“என் வாழ்க்கையிலே கலைவாணருக்குப் பிறகு அவன்தான் சார் ஆக்டர். அவன்தான் சார் மனுஷன்.” என்று மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கண்ணீர் மல்க கூறிய வீடியோ வைரலாகி…
விமர்சன சிந்தனையை ஊக்குவிப்பதற்கும், சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அல்லது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் கருத்துகளை இணைப்பதற்கும் என எந்த ஒரு வாய்ப்பையும்…
Actor vivek death: தனது நகைச்சுவையில் பெரும்பாலும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை உட்படுத்தி, ரசிகர்களைச் சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைப்பதே அவரின் நோக்கமாக இருந்தது.