அறந்தாங்கி நிஷா (Aranthangi Nisha) 12 October 1983 ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தார். நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த நிஷா, 12 ஆம் வகுப்பு வரை அறந்தாங்கியில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் பயின்றார்.
பின்னர், உயர்நிலைப் படிப்புக்காக சென்னைக்கு வந்துள்ளார். சென்னையில் படிக்கும்போது, பேச்சு போட்டிகள், மேடை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக பங்கேற்ற நிஷாவுக்கு, விஜய் டிவியில் ஒளிபரப்பான Kalakka povathu Yaru நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏறத்தாழ 5 ஆண்டுகளாக சிறு நகைச்சுவை நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள், பட்டிமன்ற பேச்சாளராகவும் பங்கேற்று வந்தார். அதன் பின்பு குக் வித் கோமாளி (Cookku With Comali) நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். விஜய் டிவியில் இவரை செல்லமாக “சின்ன திரை நயன்தாரா ” என அழைக்கின்றார்கள்.
இவரது கணவர் ரியாஸ் அலி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பணியாற்றுகிறார். இந்த தம்பதிக்கு, சஃபா ரியாஷ், ஹர்சத் ரியாஷ் என்கிற 2 குழந்தைகள் உள்ளன.
கலகலப்பு 2 திரைப்படத்தின் முலம் தமிழ் சினிமாவிற்குள் நிஷா அறிமுகமானார். அதன்பிறகு, விஷால், தனுஷ், ரியோ, ரோபோ சங்கர் , நயன்தாரா என பலருடன் நிஷா நடித்துள்ளார்.
தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பப்பான பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்று, சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனார். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் தனக்கென தனி இடத்தை பிடித்த அவர், தற்போது பாரதி கண்ணாமா சீரியலில் நடித்து வருகிறார்.Read More
Vijay Tv Arandhangi Nisha Viral Youtube Video Tamil News ஏதோ துணிமணிகள்தான் இருக்கும் என்று நினைத்தால், வீடு கூட்டும் துடைப்பம் முதல் சாப்பிடுவதற்கு இலை வரை…
Tamil Reality Show : பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து பல…
அறந்தங்கி நிஷாவும் ராஜலட்சுமியும் தங்கள் பிள்ளைகளை எந்த அளவுக்கு மிஸ் பண்ணுகிறார்கள் என்று கண்ணீருடன் கூறுவதை, நெட்டிசன்கள் சிலர் இது நிஜ அழுகையா நடிப்பா என்று பொங்கியிருக்கிறார்கள்.
Aranthangi nisha perform vadachennai aishwarya rajesh role in BB jodigal goes trolls: பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வடசென்னை ஐஸ்வர்யா ராஜேஷாக நிஷாவும்,…