scorecardresearch

Arvind Kejriwal

அரவிந்த் கெஜ்ரிவால்(Arvind kejriwal) இந்திய அரசியல்வாதியும், பிரபலமான சமூக ஆர்வலரும் ஆவர். இவர் 16 ஆகஸ்ட் 1968இல் ஹரியானாவில் பிறந்தார். ஐஐடி கரக்பூரில் இயந்திர பொறியியல் படிப்பு பயின்ற அவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், பணியை ராஜினாமா செய்துவிட்டு, ஐஏஎஸ் பணியில் சேரும் முயற்சியிலும் ஈடுபட்டு சாதித்து காட்டினார். 1993 ல் இந்திய வருவாய் சேவையில் பணிபுரிந்தார். அதே ஆண்டு, ஐஆர்எஸ்-இல் தன்னுடன் பணிபுரிந்த சுனிதாவை 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்

1999இல் பரிவர்த்தன் இயக்கம் மூலம் ரேஷன் அட்டை ஊழலை அம்பலப்படுத்தினார். பின்னர், சமூக பணிக்காக ஐஏஎஸ் வேலையை ராஜினாமா செய்தார்.2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் தன்னை இணைந்தபோது கெஜ்ரிவால் பிரபலமடைந்தார்.

பின்னர், அன்னா ஹசாரேவுடன் இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அரசியல்மயமாக்குகிறாரா இல்லையா என்பது குறித்து கருத்து வேறுபாடு எழுந்ததை தொடர்ந்து, சொந்தமாக ஆம் ஆத்மி என்கிற கட்சியை தொடங்கி, 2013 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதில், 70 இடங்களில் 28 இடங்களில் வெற்றிபெற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவுடன், டெல்லியின் முதல்வராக பதவியேற்றார். ஆனால் 49 நாட்களில் அவர் ஜன் லோக்பால் அமைக்கப்படாததைக் கண்டித்து பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் பதினாறாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 70 இடங்களில் 67 இடங்களை வென்றார். டெல்லியின் ஏழாவது முதலமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2020 டெல்லி சட்டப்பேரவை தேர்தலிலும் அமோக வெற்றியை பெற்ற அரவிந்த் கேஜ்ரிவால், தனது அண்டை மாநிலமான பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி பொறுப்பை பெறும் வகையில் கடினமாக உழைத்தவர்.
Read More

Arvind Kejriwal News

stalin kejriwal maan
’மாநில அதிகாரத்திற்கு எதிராக பா.ஜ.க செயல்படுகிறது’; கெஜ்ரிவால் உடனான சந்திப்புக்குப் பின் ஸ்டாலின் பேட்டி

டெல்லி துணை நிலை ஆளுநரால் ஆளும் அரசுக்கு தொடர்ந்து தொல்லைகள் தரப்பட்டு வருகின்றன; அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்புக்குப் பின் ஸ்டாலின் பேட்டி

nitish-kejriwal-meeting
மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக பா.ஜ.க அல்லாத அரசுகள் போராட நிதிஷ்குமார் வலியுறுத்துவார்: கெஜ்ரிவால்

பா.ஜ.க.,வின் அவசர சட்டம்; நிதிஷ் குமார் ஆம் ஆத்மி கட்சியுடனும் டெல்லி மக்களுடனும் இணைந்து போராடுவார்; அரவிந்த் கெஜ்ரிவால்

kejriwal
மசோதாக்களை முடக்கும் ஆளுநருக்கு எதிரான தீர்மானம்; ஆதரவு தெரிவித்து ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம்

மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது என்பது உண்மையில் நமது அரசியலமைப்புத் திட்டத்தை மீறுவது மட்டுமல்ல, எந்த ஜனநாயகத்திலும் உச்சமான மக்கள் ஆணையை அவமதிக்கும் செயலாகும்; முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய…

Jagan Mohan Reddy wealthiest CM, Mamata Banerjee least well-off: ADR report Tamil News
இந்த ஆண்டும் முதலிடம் பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி… இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்!

இந்தியாவில் உள்ள 30 முதல்வர்களில், 29 பேர் (97 சதவீதம்) கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஒவ்வொரு முதல்வரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.33.96 கோடி ஆக உள்ளது.

Kejriwal-Mann
தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற ஆம் ஆத்மி; அங்கீகாரத்தை இழந்த திரிணாமுல் காங்கிரஸ், என்.சி.பி, சி.பி.ஐ

ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கிய இந்திய தேர்தல் ஆணையம்; தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின்…

kejriwal
மோடியை நேரடியாகத் தாக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்; 2019 தேர்தலுக்குப் பிறகான நிதானத்தில் மாற்றம்

மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் சிறைவாசம், மோடியை “எதிரி” என்று நிச்சயமற்ற வகையில் குறிக்கும் அரசியலின் முத்திரைக்குத் திரும்பும்படி அரவிந்த் கெஜ்ரிவாலை கட்டாயப்படுத்தியுள்ளது

UP civic polls AAP’s next big target Tamil News
வீட்டு வரி பாதி குறைப்பு, தண்ணீர் வரி தள்ளுபடி: உ.பி உள்ளாட்சி தேர்தலை குறி வைக்கும் ஆம் ஆத்மி

உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் களமாடும் ஆம் ஆத்மி கட்சி வீட்டு வரியை பாதியாகக் குறைப்பதாகவும், வெற்றிபெறும் நகராட்சிகளில் தண்ணீர் வரியைத் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

Delhi News in tamil; Manish Sisodia’s arrest; AAP to hold nationwide protest
மணீஷ் சிசோடியா கைது: ஆம் ஆத்மி நாடு தழுவிய போராட்டம்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளது.

CBI arrests Deputy CM Manish Sisodia in Delhi excise policy case
மணீஷ் சிசோடியா கைது; ‘அழுக்கு அரசியல்’ என கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி கலால் கொள்கை வழக்கில் மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது அழுக்கு அரசியல் என முதல் அமைச்சர்…

விளம்பரங்களுக்காக செலவழித்த ரூ.163 கோடி; 10 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த கெஜ்ரிவாலுக்கு டெல்லி அரசு உத்தரவு

விளம்பரங்களுக்காகச் செய்யப்பட்ட முழுச் செலவையும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து மாநிலக் கருவூலத்திற்குத் திருப்பி வசூலிக்குமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்ற குழு உத்தரவிட்டிருந்தது

MCD Election Results, MCD results, MCD AAP, AAP MCD news, டெல்லி மாநகராட்சித் தேர்தல், டெல்லி, ஆம் ஆத்மி, பாஜக, MCD results, MCD result update, Delhi news, BJP, Tamil Indian Express
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த ஆம் ஆத்மிக்கு உதவியது எது?

நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு ஒரு கடினமானப் பணி இருந்தது. இருந்தாலும்கூட, வாக்கு எண்ணிக்கை நாளில், காலையில் பா.ஜ.க ஆம் ஆத்மிக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஆனால், பா.ஜ.க இறுதியில் பின்வாங்கியது.

5 நாள்களில் 11 பேரணி.. கூட்ச், சௌராஷ்டிராவில் தனிக்கவனம் செலுத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்

7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த போதிலும் எனது வங்கிக் கணக்கும் எனது கட்சி வங்கிக் கணக்கும் காலியாக உள்ளது. மோர்பி பால விபத்தில் குற்றவாளிகளை பாஜக பாதுகாக்கிறது…

Sukesh Chandrasekhar now targets Delhi CM
ரூ.50 கோடி, இரவு விருந்து.. கெஜ்ரிவால் மீது சுகேஷ் குற்றச்சாட்டு.. பா.ஜ.க.,வை தாக்கும் ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி தம்மிடம் இருந்த ரூ.50 கோடி பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Former journalist Isudan Gadhvi
‘இசுதன் காத்வி’ வேட்பாளர் அல்ல… குஜராத் அடுத்த முதல்வர்… அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

AAP in fray a 2017 detail NOTA 3rd in 115 seats in Gujarat 12 in Himachal
2017 சட்டப்பேரவை தேர்தல்.. குஜராத், ஹிமாச்சலில் 3ஆம் இடம்பிடித்த நோட்டா

2017 சட்டப்பேரவை தேர்தலில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நோட்டா 3ஆம் இடம் பிடித்தது.

Satyendar Jain, arvind kejriwal, Sukesh Chandrashekhar, சுகேஷ் சந்திரசேகர், அரவிந்த் கெஜ்ரிவால், Sukesh Chandrashekhar protection money, delhi l-g, morbi bridge collapse, aap, bjp, delhi news
சுகேஷ் சந்திரசேகர் கடிதம்: ஆம் ஆத்மி சத்யேந்தர் ஜெயினுக்கு பணம்; பா.ஜ.க-வின் தந்திரம் – கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயினுக்கு, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, மோர்பி சம்பவத்தில் இருந்து…

Phone-in with your CM candidate AAP tries a Punjab in Gujarat
பஞ்சாப் பாணியை குஜராத்தில் இறக்கும் ஆம் ஆத்மி.. முதல்வரை மக்களே தேர்வு செய்யலாம்.!

ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டது. 21,59,437 பதில்களில் 93% பேர் பகவந்த் மான் தேர்வாக இருந்தார்.

Gods on currency notes BJP worried Arvind Kejriwal dipping into its pocket
ரூபாய் தாள்களில் விநாயகர், லட்சுமி படங்கள்.. கெஜ்ரிவால் கோரிக்கை, பா.ஜ.க கலக்கம்..!

ஆம் ஆத்மி இந்து விரோத கட்சி, அர்பன் நக்ஷல் என பாஜகவினர் தாக்கிவரும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து இந்தப் பேச்சுகள் வந்துள்ளன.

Lakshmi Ganesh on currency notes to bring Indias economy
ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படங்கள்.. அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

அவரிடம் இந்த யோசனை எப்படி வந்தது என்று கேட்டபோது, தனது வீட்டில் தீபாவளி பூஜை செய்து கொண்டிருந்தபோது, தனது நினைவுக்கு வந்ததாகக் கூறினார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.