scorecardresearch

Bindu Madhavi

இந்திய தமிழ் திரைப்பட நடிகை பிந்து மாதவி (Bindu Madhavi), தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான பொக்கிஷம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

ஆந்திர மாநிலத்தில் மடனப்பல நகரில் 1986-ம் ஆண்டு ஜூன் 14-ல் பிறந்துள்ளார். இவரின் தந்தை வணிக வரித்துறையின் துணை ஆணையாளராக பணியாற்றினார்.

சென்னையில் குடிபெயர்ந்த அவர், தனது இளங்கலை பட்டம் மற்றும் மேற்படிப்பினை முடித்தார். இவரின் சகோதரர் சாகர் 2012-ம் ஆண்டு ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.

கல்லூரியில் படிக்கும்போதே, சரவணா ஸ்டோர்ஸ், டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகிற்குள் நுழைவதற்கு டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரம் உதவியாக அமைந்தது. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவால் ஆடிஷன் செய்யப்பட்டு, அவரது தயாரிப்பான அவகாய் பிரியாணி படத்தில் 2008 இல் நடித்தார். தமிழில் பொக்கீஷம் திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்ததடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆக தொடங்கினார். கழுகு, தோழன், கேடி பிள்ளை கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்குராஜா ஆகிய திரைப்படங்கள் இவரை வெற்றிப்பாதைக்கு வழிவகுத்தது.

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ் சீசன் 1’இல் போட்டியாளராக பங்கு பெற்றார். ஆனால், வெற்றபெற முடியவில்லை. அதேசமயம், தெலுங்கு நான் ஸ்டாப் பிக்பாஸில் பங்கேற்ற பிந்துமாதவி, பிக்பாஸ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.
Read More

Bindu Madhavi News

அருள்நிதி, பிந்து மாதவி நடிப்பில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படம் ‘புகழேந்தி எனும் நான்’. இந்தப் படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் நுழையும் புதிய பெண் போட்டியாளர் இவர் தானா?

பிக்பாஸ் ஷோ முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது, 14 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

Bindu Madhavi Videos

pakka movie
விக்ரம் பிரபு நடிப்பில் ‘பக்கா’ படத்தின் டிரெய்லர்

எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘பக்கா’. நிக்கி கல்ரானி, பிந்து மாதவி என இரண்டு ஹீரோயின்கள் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்துள்ளனர்.

Watch Video