கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார்.
பலத்த மழையால் வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கியது. சாலையில் மரங்கள் விழுந்ததால், சென்னை செங்கல்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 92 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம், பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கி கிளையை நடத்தி வந்த பலே ஆசாமிகளை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் தமிழகத்தில் கடலூர், சேலம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி தாலுக்காவின் நிர்வாக செயலாளர், துப்புரவு மேற்பார்வையாளர் ஆகியோரை கடலூர் மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்துள்ளார்.
Chennai weather forecast: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
சோதனையில் ஈடுபட்ட இரண்டு காவல்துறையினரையும் ஆயுதமேந்திய காவல் படைக்கு இடம் மாற்றி உத்தரவு