ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan), 29 ஜூலை 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். 2010இல் வெளியான சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அடுத்த வெளியான அரிது அரிது படமும் மக்களிடையே வரவேற்பை பெறதாதால், கதாநாயகனாக தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, சில படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
ஆனால், 2014 இல் வெளியான பொறியாளன் திரைப்படம் ஹரிஸ் கல்யாணிடம் இருக்கும் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தது. அடுத்ததடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கின.
2017இல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்களிடையே தன்னை நிலைநிறுத்தினார். தொடர்ந்து, பயார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுஷராசி நேயர்களே, தாராள பிரபு என அடுத்தடுத்து படங்கள் வணிக ரீதியாக வசூலை பெற்றதையடுத்து, தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி வருகிறார். அவரது தந்தை, ஃபைவ் ஸ்டார் கல்யாண், திரைப்பட விநியோகஸ்தர் ஆவர். அவர், வில் அம்பு திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் தந்தையாக நடித்திருந்தது குறிப்பிடதக்கது. Read More
மிகத் தகுதியான பிரம்மச்சாரி என்ற அடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஹரீஷ் கல்யாண், தற்போது திருமண விளையாட்டில் தள்ளப்படும் பொறியியல் பட்டதாரி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட…
தமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா வில்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருக்கிறார். பிக் பாஸ்…