நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதில்லை என்று முடிவெடுத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “நண்பர் என்ற முறையில் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன். சென்னை சென்றதும் அவரை சந்திப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?” என்று ஆளும் கட்சியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு, “கமல்ஹாசன் தனது சொத்துக் கணக்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? நான் எனது சொத்துக் கணக்கு குறித்து வெள்ளை அறிகை வெளியிடத் தயார்” என்று சவால் விடுத்துள்ளார்.
கமல்ஹாசனின் கட்சி கொள்கைகள் அமெரிக்காவின் செண்ட்ரிஸ்ட் கட்சியின் கொள்கைகளைத் தழுவி அப்படியே காப்பியடிக்கப்பட்டது என்று விசிக எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம், நீங்கள் பாஜகவின் B டீமா என்று கேள்வி எழுப்பியதற்கு கமல்ஹாசன் ஆவசேமாக மறுப்பு தெரிவித்தார்.
மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண் சினேகா மோகன்தாஸ் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மநீமவில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பிரசார வாகனத்தையும் தயார் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெங்காய விலை உயர்வு பற்றி பதிவிட்ட ஒரு ட்வீட்டை நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கிண்டல் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் வெங்காயத்தைப் பற்றி அப்படி என்ன ட்வீட் செய்தார்?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் தீவிர நடவடிக்கையையும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழ்ந்து பேசியது குறித்து நெட்டிசன்கள் பலவாறாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.