நிர்மலா சீதாராமன்(Nirmala sitharaman), இந்தியாவின் தற்போதைய நிதியமைச்சர் ஆவார். தமிழ்நாட்டின் மதுரையில் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று ஸ்ரீ நாராயணன் சீத்தாராமன்-சாவித்ரி தம்பதிக்கு பிறந்தார். இவரின் அப்பா ரயில்வே துறையில் பணியாற்றினார். இளங்கலைப் பட்டத்தை திருச்சியில் உள்ள சீத்தாலக்ஷ்மி ராமசுவாமி கல்லூரியில் முடித்த இவர், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை பட்டத்தை முடித்தார்.
பரக்கல பிரபாகர் என்பவரை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் லண்டனுக்கு குடிப் பெயர்ந்தார். சிறிது காலம் லண்டனில் கழித்தப் பின்பு 1991 ஆம் இந்தியாவிற்கு திரும்பினார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் உள்ளார்.
2003 – 2005 ஆண்டுகளில் நிர்மலா சீத்தாராமன் “ பெண்கள் நல ஆணையத்தில் “ உறுப்பினராக பணியாற்றி வந்தார். அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட சுஷ்மா சுவராஜ், அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்புப்படி 2006 ஆம் ஆண்டு கட்சியின் வெறும் பேச்சாளராக இணைந்த இவர் , 2010 ஆம் ஆண்டு ரவி சங்கர் தலைமையிலான கட்சியின் 6 பேர் கொண்ட குழுவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரானார்.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடிக்கும் , பா.ஜா.காவிற்கும் ஆதரவான பிரச்சாரத்தின் பலனாக, மே 26 , 2014 அன்று வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மனோகர் பரிக்கர் மறைவிற்குப் பின்னர் இவர் இந்தியப் பாதுக்காப்புத் துறையின் அமைச்சராக பதவி வகித்தார். 2019 மே 31 அன்று மத்திய நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு இத்துறையை வகிக்கும் இரண்டாம் பெண் என்ற பெருமையைப் பெற்றார்Read More
நாட்டின் பொருளாதாரம் நிலையான பாதையில் செல்கிறது என்று கூறிய மத்திய நிதி அமைச்சர் சீதாராமன், இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும்,…
பழைய வரி முறையின் கீழ், வரி செலுத்துவோர் ஐ-டி சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வரி சேமிப்பு முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம்.
மத்திய பட்ஜெட் 2023-ல் மத்திய அரசு மூலதனச் செலவினங்களை உயர்த்தியுள்ளது, நிதி நிர்வாகத்தையும் காட்டியுள்ளது. தனிநபர் புதிய வருமான வரியை இயல்பான வரி என அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநில தலைநகர்களிலும் யூனிட்டி மால் நிறுவப்படும். இது, உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்களை ஊக்குவிக்கும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது கூறினார்.
முதல்முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி, 2022-23ஆம் ஆண்டில் கல்விக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்த நிலையில், திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.99,881 கோடியாக உள்ளது
உரங்களை குறைப்பது, சதுப்புநிலத் தோட்டம், இயற்கை வளங்களை ஊக்குவித்தல் ஆகியவை கவர்ச்சியான முழக்கங்களுடன் வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் சுருக்கமான பெயரின் நோக்கங்கள் ஆகும்.
“அம்ரித் கால்க்கான எங்கள் பார்வையில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரம், வலுவான பொது நிதி மற்றும் வலுவான நிதித்துறை ஆகியவை அடங்கும்” என நிர்மலா…