ஸ்மிருதி ஜுபின் இராணி(Smriti Irani), மார்ச்சு 23, 1976 அன்று டெல்லியில் பஞ்சாபி–வங்காள குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். வரது தந்தை அஜய் குமார் மல்ஹோத்ரா பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். அவர் ஒரு சிறிய கூரியர் நிறுவனத்தை நடத்தி வந்தார். அவரது தாய் ஒரு பெங்காலி ஆவார். புனித சிசு ஆக்சிலியம் பள்ளியில் 12வது வகுப்பு வரை கல்வி பயின்ற ஸ்மிருதி, மேற்படிப்பைத் தொடரவில்லை.
ஆரம்பத்தில் பாஜக பெண்கள் பிரிவில் பணியாற்றினார். 2004ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில இளைஞர் அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில், மக்களவைத் தேர்தலில், டெல்லி சாந்தினி சௌக் தொகுதியில் கபில் சிபலுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், அவர் பாஜகவின் மத்திய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். 2010 ஜூன் 24 ம் தேதி பாஜக அனைத்து இந்திய மகளிர் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2011ம் ஆண்டு ஆகஸ்ட்டில், குஜராத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக மாநிலங்களவைக்கு தேந்தெடுக்கப்பட்டார். இவர் ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் பேசும் திறனுடையவர் ஆவார்.
2014 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து 2016 ஆம் ஆண்டு மத்தி வரை அவர் மத்திய மனிதவள அமைச்சராக பணியாற்றினார். தற்போது அவர் பிரதமர் மோடி அமைச்சரவையில் ஜவுளித் துறை அமைச்சராக உள்ளார்.Read More
வானதி ஸ்ரீனிவாசன் எழுதிய ’தடையொன்றுமில்லை’ புத்தக வெளியீட்டு விழா; பெண்கள் தாங்கள் என்னவாக வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் ஸ்மிருதி…
ஸ்மிருதி இரானி மகளுக்கும், கோவாவில் உள்ள கஃபே மற்றும் மதுபான விடுதிக்கு சம்பந்தமில்லை; ஆனால் அவரின் நிறுவனத்தின் முகவரியும் கஃபே-வின் முகவரியும் ஒரே இடம் தான்
அந்தோணி டி சௌசா 2021ஆம் ஆண்டு மே மாதம் இறந்துவிட்டார். இறந்துவிட்டவரின் பெயரில் ஜூன் மாதம் பார் நடத்தும் உரிமம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
நடிகை, தயாரிப்பாளர், ஓவியர், அரசியல்வாதி என பலமுகங்களைக் கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது கணவருக்காக ஆசையாக செய்த எக் ஃபிரைட் ரைஸ் செய்து அசத்தியுள்ளார்.…
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக மதுரையில் பாஜக இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியது. இதில் மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை…
பாலியல் பலாத்காரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கள் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வில் வெள்ளிக்கிழமை மக்களவையில் ஆத்திரமடைந்த பாஜக தலைவர்கள் அவரை மன்னிப்பு…
குஜராத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு கலாச்சார கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தனது கைகளில் இரண்டு வாள்களைக் சுழற்றியபடி நடனம் ஆடிய வீடியோ…
பிரபல பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் திருமணம் ஃபோட்டோ குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலாய்த்துள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. தீபிகா படுகோன்…