Advertisment

Realme C1 : பட்ஜெட் விலையில் மிகச் சிறந்த ஸ்மார்ட்போன்!

Realme C1 : ரியல்மி தனது முதல் ஸ்மார்ட்போனான ரியல்மி 1-ஐ, கடந்த மே மாதம் அறிமுகம் செய்தது. இந்த நான்கு மாத காலத்தில் 10 மில்லியன் இளம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Realme C1 Smartphone, Realme C1 Price in India, Realme C1 specifications,

Realme C1

Realme C1 : பண்டிகைக் காலத்தில் உங்கள் பட்ஜெட்டில் ஒரு சிறந்த ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டுமா? அப்படியென்றால் ரியல்மி C1 தான் உங்களது பெஸ்ட் சாய்ஸாக இருக்க முடியும்.

Advertisment

ரியல்மி நிறுவனம், தனது புதிய ரியல்மி C1 பிராண்டினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை வெறும் 6,999 என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ரெட்மி 6A விட, அதிக சிறப்புகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ரியல்மி C1 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக நாட்ச் டிஸ்ப்ளே, 87.8% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ரியல்மி சி1 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார் வழங்கப்படாத நிலையில் ரியல்மி சி1 மாடலில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி C1 - ரெட்மி 6A ஒப்பீடு:

ரியல்மி C1 சிறப்பம்சங்கள்:

- 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm பிராசஸர்

- அட்ரினோ 506 GPU

- 2 ஜிபி ரேம்

- 16 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

- டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2

- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4

- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2

- ஃபேஸ் அன்லாக்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ரியல்மி சி1 அக்டோபர் 11-ம் தேதி முதல் கிடைக்கும்.

ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்

- பவர் வி.ஆர். GE GPU

- 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS

- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்

- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரியல்மி தனது முதல் ஸ்மார்ட்போனான ரியல்மி 1-ஐ, கடந்த மே மாதம் அறிமுகம் செய்தது. இந்த நான்கு மாத காலத்தில் 10 மில்லியன் இளம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது. இதுவரை ரியல்மி 1, ரியல்மி 2, ரியல்மி 2 புரோ மற்றும் ரியல்மி C1 என நான்கு ஸ்மார்ட்போன்களை ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 'Previous to be Young' என்ற தீமோடு இளசுகளின் மனதை ரியல்மி நிறுவனம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் குறைவான விலையில் பல மாடல்களை ரெட்மி வழங்கி வருகிறது. அந்த வகையில், அறிமுக நிலையிலேயே 7000 ரூபாய்க்கும் குறைவான விலையில், மிகச் சிறந்த தரத்துடன் ஸ்மார்ட்போன் வழங்கி பரவசப்படுத்திக் கொண்டிருக்கிறது ரியல்மி C1.

Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment