Advertisment

‘பட்ஜெட் 2019 விவசாயிகளுக்கு அவமானம்’ - ராகுல் காந்தி - தலைவர்கள் கருத்து

இது வாக்குகளை குறிவைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட். மக்களின் மீதுள்ள அக்கறையால் உருவாக்கப்பட்டதல்ல - திருச்சி சிவா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today Live, India China Face Off, Rahul Gandhi, PM Modi

Tamil News Today Live

Interim Budget 2019 feedback : 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக அமைந்தது. அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக அமைந்தது தனிநபர் வருமானவரி உச்ச வரம்பினை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தி அறிவித்தது.

Advertisment

இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த இடைக்கால நிதியறிக்கை தாக்கல் பற்றி தலைவர்களின் கருத்துகள் என்ன ?

மக்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகள் (Interim Budget 2019 feedback)

ராகுல் காந்தி

திறமையற்ற ஆட்சியாலும், ஆணவத்தாலும் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நம் நாட்டு விவசாயிகளை அழித்துவிட்டது இந்த அரசு. ஒரு நாளைக்கு விவசாயிகளுக்கு வெறும் 17 ரூபாய் கொடுப்பது அவர்களை அவமதிக்கும் செயல் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

ப.சிதம்பரம் கருத்து

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, வாக்குகளை பெறுவதற்காகவே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாட்டின் வளங்களைப் பெற ஏழைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற காங்கிரஸின் கொள்கைகளை அப்படியே வாசித்திருக்கும் நிதிஅமைச்சர் பியூஷிற்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார்.

அருண் ஜெட்லியின் கருத்து

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். ஏழைகளுக்காக, இந்திய நடுத்தர மக்களின் நன்மைக்காக, விவசாயிகளுக்காக, வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த பட்ஜெட் என்று அருண் ஜெட்லி அறிவித்திருக்கிறார்.

தமிழிசை சவுந்தராஜன்

வசதியான வாழ்வினை அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நம்பிக்கை மிகுந்த, தன்னிறைவுடைய புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதார பின்புலம் உடைய நாடாக இந்தியா மாறும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

காகிதப் பூமாலை இந்த இடைக்கால பட்ஜெட் - டிடிவி தினகரன்

கனிமொழி

திமுக கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இந்த பட்ஜெட்டை குளிர்காலத்தில் சொல்லும் கதை போன்று இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

திருச்சி சிவா

இது வாக்குகளை குறிவைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட். மக்களின் மீதுள்ள அக்கறையால் உருவாக்கப்பட்டதல்ல என்று திருச்சி சிவா தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த பட்ஜெட் திட்டங்கள் உருவாக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது வரை தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் வாயிலாகவே மக்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. அடுத்த 4 மாதங்களில் மட்டும் இந்த திட்டங்களை எப்படி அமல்படுத்துவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்திருக்கிறார்.

பாமக தலைவர்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வரவேற்றுள்ளார் ராமதாஸ். வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம், விவசாயிகளுக்கான நிதி உதவி ஆகியவை வரவேற்கப்பட வேண்டியவை என்று அவர் கூறியுள்ளார்.

Union Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment