Advertisment

2019 இடைக்கால பட்ஜெட் : விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி... பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Interim Budget 2019 highlights

Interim Budget 2019 highlights

Interim Budget 2019 highlights : மத்தியில் ஆளும் பாஜக அரசால் இன்று தாக்கல் செய்யப்படுகிறது இடைக்கால பட்ஜெட். இந்த பட்ஜெட்டினை இடைக்கால நிதி அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல். அந்த பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்.

Advertisment

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்

ரூபாய் 75 ஆயிரம் கோடி செலவில் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் அடைவார்கள். மூன்று தவனைகளாக, 2 ஏக்கர் அளாவு வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும்.

மீன்வளத்துறை

மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை அமைக்கப்படும்.

ஓய்வூதியத் திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்தீய அரசின் பங்களிப்பை 10% இருந்து 14% மாக உயர்த்தப்படும்.  பி.எஃப். சந்தாதாரார்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி 6 லட்சம் வழங்கப்படும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய திட்டம் அறிமுகம். இந்த திட்டங்கள் மூலமாக 10 கோடி பேர் பயனடைவார்கள். 60 வயதிற்கு பின்பு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வு ஊதியமாக ரூ.3000 வழங்கப்படும். இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காமதேனு திட்டம்

பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காமதேனு என்ற சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை 

பாதுகாப்புத் துறைக்கு அதிக அளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு. ராணுவத்திற்கு கூடுதல் பட்ஜெட் ஒதுக்கி அறிவித்துள்ளது மத்திய அரசு. 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கம்.

பெண்கள் மேம்பாடு 

கூடுதலாக 8 கோடி இலவச கேஸ் இணைப்புகள் தரப்படும். முத்ரா திட்டத்தின் கீழ் 70% பெணகள் பயனடைந்துள்ளனர். 7.23 லட்சம் கோடி கடன் முத்ரா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.  பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் பேறுகால விடுப்பு அளிக்கப்படுள்ளது.

போக்குவரத்து

நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

மொபைல் டேட்டா & மேக் இன் இந்தியா 

செல்போன் டேட்டா பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 15%க்கும் மேல் அதிகமடைந்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே செல்போன்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உருவாக்கத்தின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. 268 உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ரயில்வே துறை

ரயில்வே துறைக்கு 64,587 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவிப்பு. தேசம் முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராசிங் குறைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏற்படும் விபத்துகளும் குறைந்துள்ளது.  வடகிழக்கு மாநிலங்களில் ரயில்வே சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி

நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.  வரி வருவாய் 6,38,000 கோடியில் இருந்து 12 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு.  வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை 2 வீடுகளுக்கு அளிக்கப்படும். வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை 

பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் மூலமாக 1.03 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளி வந்துள்ளது.  50 ஆயிரம் கோடி கணக்கில் வராத சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன மற்றும்  ரூ.6,900 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட ரூ. 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

Union Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment