Advertisment

Budget 2021 Highlights: பெட்ரோல் டீசலுக்கு வேளாண் வரி, கோவா மாநில கொண்டாட்டத்திற்கு 300 கோடி

union budget 2021 -22 : 2021-22 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படஉள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை வாசிக்க தொடங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Budget 2021 Highlights: பெட்ரோல் டீசலுக்கு வேளாண் வரி, கோவா மாநில கொண்டாட்டத்திற்கு 300 கோடி

union budget 2021 -22 : 2021-22 ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

பொருளாதார கணக்கெடுப்பு ஆண்டு 2020-21-ன் படி இந்திய பொருளாதாரம் 11 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 7.7 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைகளை உயர்த்துவதற்காக தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியனின் வழிகாட்டுதலின் கீழ் நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்,நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இதுவாகும். இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்திய சுதந்திரத்திற்கு பின் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்ததை போல, தற்போதும் சிவப்பு கம்பலத்தால் ஆன தூணியில் பட்ஜெட் குறித்த கோப்புகள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்:

இன்று காலை கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், 2021-22 வரவு செலவுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு பட்ஜடெ் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி சற்றுமுன்  நாடாளுமன்றம் வந்த நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தற்போது 2021-22 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வாசிக்க தொடங்கியுள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பட்ஜெட் "முன்னோடியில்லாத காலங்களில்" தயாரிக்கப்பட்டது என்றும், லாக்டவுன் காலங்களில், நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்த அத்தியாவசிய தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இந்த பட்ஜெட்டில், ஏழைகள், புலம்பெயர்ந்தோர், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு திட்டங்களின் கீழ் அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பதை எடுத்துரைத்த நிர்மலா சீதாராமன்,. இந்த பட்ஜெட் 5 மினி பட்ஜெட்டுகள் போன்றது என்று கூறினார்.

publive-image

தொடர்ந்து தனது உரையில், தாகூரை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர்,. .“விடியல் இன்னும் இருட்டாக இருக்கும்போது ஒளியை உணரும் பறவை” என்று கூறினார்,  மேலும் "தற்போது இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. இந்த தடுப்பூசிகள் இந்தியா மட்டுமல்லாது அண்டை நாடுகளுக்கும் பயனளிக்கிறது என்று கூறினார். மேலும் கோவிட் -19 தொற்றுநோய் தடுப்பது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொரை வென்று வரலாற்று சாதனை படைத்ததை நினைவு கூர்ந்த அவர், வரலாற்றில் இந்த தருணம் ஒரு புதிய சகாப்தத்தின் விடியலாகும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து 2021-22 பட்ஜெட் திட்டம் ஆறு தூண்களில் உள்ளதாக தெரிவித்த அவர், சுகாதாரப் பாதுகாப்பு முதல் உள்கட்டமைப்புக்காக மொத்தம் சுமார் ரூ .2 லட்சம் கோடி செலவாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டமைக்க ஆதரவளிப்பதற்கும் வசதி செய்வதற்கும் எங்கள் அரசாங்கம் முழுமையாக தயாராக உள்ளது, ”என்று அவர் கூறினார், தொடர்ந்து 2021“ மைல்கற்களின் ”ஆண்டு என்று கூறினார்.

மேலும் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அவர் முன்வைத்தபோது, கொரோனா போன்ற சுகாதார நெருக்கடியை இந்தியா ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் "ஆத்மனிர்பர் பாரத்தின் மொத்த தாக்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் ரூ .17.1 லட்சம் கோடி ஆகும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதமாகும்" என்று சீதாராமன் கூறினார்.

தொடர்ந்து பகுதி A இன் பட்ஜெட் திட்டங்கள், உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, வளர்ச்சி, மனித மூலதனம், புதுமை மற்றும் ஆர் அன்ட் டி, இயற்பியல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட 6 தூண்களில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார். பிரதமர் அறிவித்துள்ள ஆத்மனிர்பர் ஸ்வஸ்த பாரத் திட்டத்திற்கு 6 ஆண்டுகளில் 64,180 கோடி செலவினத்துடன் தொடங்கப்படும் என்றும் "ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், காற்று மாசுபாடு மற்றும் கழிவுகளை பிரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக" என்று கூறியுள்ளார்..

மிஷன் போஷன் 2.0 மற்றும் ஜல் ஜீவன் மிஷன் அர்பன் ஆகிய திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், "நகர்ப்புற ஸ்வச் பாரத் திட்டத்திற்கு ரூ .1.4 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படும்" என்று கூறினார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா தடுப்பூசிக்காக 35000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ரூ.64,180 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுகாதாரம் மற்றும் நலனுக்கான பட்ஜெட் செலவு 2021-22 பட்ஜெட்டில் 2,23,846 கோடி ரூபாய். இது 137 சதவீத அதிகரிப்பு ஆகும். தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள 217 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் சாலை பணிகளுக்கு ரூ .95,000 கோடி நிதி செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 11,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை முடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று சீதாராமன் கூறினார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டநெடுஞ்சாலை பணிகளில் தமிழ்நாட்டில் ரூ .65,000 கோடி முதலீட்டில் 3,500 கி.மீ தூரமும், கேரளாவில் 1,100 கி.மீ, மேற்கு வங்கத்தில் 675 கி.மீ., ரூ .95,000 கோடி செலவில், அடுத்த 3 ஆண்டுகளில் அசாமில் 1,300 கி.மீ. சாலை வசதி அமைக்கப்படும்.

இந்த நிதியாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு பி.எல்.ஐ திட்டங்களுக்கு ரூ .1.97 லட்சம் கோடியை செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது மின்னணு உற்பத்தித் திட்டங்களுக்காக பி.எல்.ஐ.க்கு அறிவிக்கப்பட்ட ரூ .40,951 கோடிக்கு அதிகமாகும் ரயில்வேக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது பேருந்துகளுக்கு ரூ .18,000 கோடியை மையம் வழங்கப்பட்டுள்ளது.

மின் துறைக்கு ரூ .3.55 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது., அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 100 நகரங்களை எரிவாயு விநியோக அமைப்பில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான புதிய எரிவாயு குழாய் திட்டத்தை அறிவித்தார். சூரிய ஆற்றல் திட்டத்திற்குரூ .1,000 கோடியும், இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கு ரூ .1,500 கோடியும் அறிவிக்கப்பட்டன.

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ .20,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.. "இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஒரு பகுதியை வரும் ஆண்டில் ஆரம்ப பொது வழங்கல் மூலம் விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொது சலுகையை எளிதாக்குவதற்காக தற்போதுள்ள சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

publive-image

”விவசாயிகளின் நலனில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” 2020-21 ஆம் ஆண்டில் கோதுமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ .75,000 கோடிக்கு கடன் தொகையில், 43.36 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாய கடன் இலக்கை ரூ .16.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மொத்த தொகை 2020-21ல் ரூ .1.72 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான சிறப்புத் திட்டத்தையும், வங்காளம் மற்றும் அசாம் தேயிலைத் தொழிலாளர்களுக்கு ரூ .1,000 கோடியையும் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல் முறைாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை நடத்தப்படஉள்ளது. இதற்கா 3,768 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட கோவா மாநிலம், 60 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக ரூ .300 கோடி ஒதுக்கீடு செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். வரிவிதிப்பு செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில், சில நிபந்தனைகளின் கீழ் மூத்த குடிமக்களுக்கான வருமான வரியை ரத்து செய்வதாகவும், என்.ஆர்.ஐ.க்களுக்கு இரட்டை வரிவிதிப்பை அகற்றுவதற்கான புதிய விதிகள் மற்றும் பிற நடவடிக்கைகளில் வரி மதிப்பீடுகளின் காலத்தைக் குறைப்பதாகவும் அறிவித்துள்ளார்.

சிறு நிறுவனங்களின் அதிகபட்ச நுழைவு மூலதனம்  ரூ .50 லட்சத்திலிருந்து ரூ .2 கோடியாக உயர்த்தவும், அதிகபட்ச வருவாய் வரம்பை ரூ .2 கோடியிலிருந்து ரூ .20 கோடியாக உயர்த்தவும் அறிவிக்கப்பட்டது. ஒரு நிறுவனத்தை அமைப்பதற்காக ஒரு நபருக்கான தேவைகளை பூர்த்தி செய்ய, 182 நாட்களில் இருந்து 128 நாட்களாக அரசாங்கம் குறைத்துள்ளது. ”"செப்பு ஸ்கிராப் மீதான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சில வாகன பாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.

மேலும்  பட்ஜெட்டில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ .2.5, டீசலுக்கு ரூ .4 வேளாண் வரி விதிக்கப்பட்டுள்ளது. 100% மது பானங்கள், 30% காபூலி சானா, 10% பட்டாணி, 50% பெங்கால் கிராம் / சிறிய பட்டாணி, 20% பயறு (மொசூர்) உட்பட விதிக்கப்பட்டுள்ளது. பருத்தியில் 5%, கச்சா பாமாயில் 17.5%, கச்சா சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய், 2.5% தங்கம், வெள்ளி மற்றும் டோர் பார்கள்; ஆப்பிள்களில் 35%; குறிப்பிட்ட உரத்தில் 5%; நிலக்கரி, லிக்னைட் மற்றும் கரி மீது 1.5%. ஆகியவற்றிற்கு வரி  விதிப்பு நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Union Budget 2021 Union Budget Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment