10 banks offering higher interest rate : சில முக்கியமான வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு மிகவும் குறைந்த வட்டியே வழங்குகிறது. எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி போன்ற வங்கிகள் சில சிறிய வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைக் காட்டிலும் மிக குறைவான அளவிலேயே வட்டி வழங்குகின்றன. எஸ்.பி.ஐ. ஆண்டுக்கு 2.7% வட்டியை சேமிப்பு கணக்குகளுக்கு வழங்குகின்ற நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் எச்.டி.எஃப்.சி. போன்ற வங்கிகள் ஆண்டுக்கு 3% வட்டியை ரூ. 50 லட்சம் வரை சேமிப்பு வைத்திருக்கும் பயனர்களுக்கு வழங்குகிறது.
Advertisment
அதிக அளவிலான வட்டி என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பணம் சேமிப்பு கணக்கில் முதலீடு செய்யும்போது பெறப்படும். ஒரு லட்சத்திற்கும் குறைவாக உங்கள் கணக்கில் பணம் இருந்தால் 5% வட்டியை சில சிறு வங்கிகள் வழங்குகின்றன. ஒரு லட்சத்தை தாண்டும் போது 7.25% வரையில் வட்டி வழங்குகிறது என்று பேங்க்பசார். காம் நிறுவனத்தின் சி.இ.ஒ. அதில் ஷெட்டி குறிப்பிடுகிறார்.
சில சிறு வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கும் வட்டியானது பல பெரிய வங்கிகள் எஃப்.டி. போன்ற திட்டங்களுக்கு வழங்கும் வட்டியை விட கூடுதலாக உள்ளது. எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகள் 5 முதல் 5.5% வரை நிலையான வைப்பு நிதிக்கு வட்டி வழங்குகிறது. எஸ்.பி.ஐ. 5-5.4% வட்டி வழங்குகிறது. சில நேரங்களில் சிறு வங்கிகளில் துவங்கும் சேமிப்பு கணக்கு நல்ல வட்டி லாபத்தை உங்களுக்கு ஈட்டித்தரும்.
சிறு நிதி வங்கிகளில் பணத்தின் பாதுகாப்பு குறித்தும், டி.ஐ.சி.ஜி.சி வரம்பு அவர்களுக்கும் பொருந்துமா என்று அடிக்கடி கேட்கிறார்கள். "அனைத்து வணிக வங்கிகளிலும் வைப்புத்தொகை பணம் டி.ஐ.சி.ஜி.சி மூலம் ஒரு வங்கிக்கு ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.5 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம். இந்திய வங்கி சுற்றுச்சூழல் அமைப்பு வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்க பல திட்டங்களை கையில் கொண்டுள்ளது. உங்களின் வருவாய் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் நீங்கள் உங்களின் பணத்தை பல வங்கிகளில் பிரித்து முதலீடு செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news