நாளை முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை!!!

வங்கிகளுக்கு நாளை முதல் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் ஏடிஎம்களில் பணத்தை முன்னதாகவே எடுத்துக் கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளது.

இம்மாதம் 28ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதாலும், 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், வங்கிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால் கூடுதலாக திங்கள் கிழமை 30ம் தேதி புத்த பூர்ணிமாவும், செவ்வாய் கிழமை மே 1-ம் தேதி தொழிலாளர் தினமும் வருவதால் அந்த இரண்டு நாட்களும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் (28ம் தேதி முதல் மே.1ம் தேதி வரை) நான்கு நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவித பண பரிவர்த்தனைகளும் நடைபெறாது. இன்று வங்கி முழு நாளும் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவசர பணத்தேவை, அலுவல்களை இன்று முடித்துக் கொள்ளலாம் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன.

அத்துடன், விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் ஏடிஎம்களில் மக்கள் முன்கூட்டியே பணத்தினை தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளுமாறும் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

×Close
×Close