Advertisment

கிரெடிட் கார்டு ரிவார்ட்ஸ் வேணுமா? இதெல்லாம் மறக்காதீங்க!

கிரெடிட் கார்டு ரிவார்ஸ்-ஐ அதிகரிக்கும் 5 வழிகள் குறித்து பார்க்கலாம்.

author-image
Jayakrishnan R
New Update
5 ways to maximise the rewards on your credit card

கிரெடிட் கார்டு ரிவார்ட்ஸ் அதிகரிக்கும் வழிகள் குறித்து பார்க்கலாம்.

இன்று பலவிதமான கிரெடிட் கார்டு விருப்பங்கள் உள்ளன. சரியாக தேடினால், அனைவரின் தேவைகளுக்கும் கிரெடிட் கார்டுகள் உள்ளன.

Advertisment

தற்போது, கிரெடிட் கார்டுகள் கேஷ்பேக், பயண பலன்கள் மற்றும் வெகுமதி புள்ளிகள் (ரிவார்ட்ஸ்) போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.

அதிலும், கிரெடிட் கார்டு வெகுமதிகள் உலகம் கடுமையான போட்டித்தன்மையுடன் மாறியுள்ளது.

இதனால், கார்டு வழங்குபவர்கள் புதிய வாடிக்கையாளர்களை எப்போதும் அதிக வெகுமதிகள் மற்றும் சலுகைகளுடன் கவர்ந்திழுக்கின்றன.

அந்த வகையில், உங்கள் கிரெடிட் கார்டிலிருந்து நீங்கள் எப்படி அதிகமாகப் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

1) தேவைக்கு ஏற்ற சரியான அட்டை அவசியம்

கிரெடிட் கார்டுகள் மற்றும் சலுகைகள் பற்றி இணையத்தில் கிடைக்கும் ஏராளமான தகவல்கள் மூலம், சரியான கார்டை தேர்ந்தெடுங்கள்.

வாடிக்கையாளர்கள் தங்கள் செலவு முறைகளைப் புரிந்துகொள்வதும், அவர்கள் அதிகமாகச் செலவழிக்கும் வகைகளைக் கண்டறிவதும் முக்கியம்.

2) வெகுமதியை அதிகரிப்பதன் நுணுக்கங்கள்

கிரெடிட் கார்டு வெகுமதிகளை அதிகரிப்பதற்கான வழிகள் எவ்வாறு செயல்படுகின்றன? ஒவ்வொரு செலவின்போது ரிவார்ட்ஸ்களை அதிகரிப்பது எப்படி என்பதை புரிந்துக்கொள்வது அவசியம்.

3) பெரிய டீல்கள் மீது கவனம்

அவ்வப்போது உங்கள் கிரெடிட் கார்டில் உங்கள் வங்கி நடத்தும் சலுகைகள் குறித்தும் அறிந்திருப்பதும் முக்கியம். நாட்டில் உள்ள பெரும்பாலான பெரிய வழங்குநர்கள் சில பெரிய வணிகர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர், இதன் விளைவாக சில அற்புதமான நன்மைகள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது நீட்டிக்கப்படுகின்றன.

இந்தச் சலுகைகள் பொதுவாக வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே என்றாலும், வணிகத் தளங்களில் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் தள்ளுபடிகளுக்கு மேல் தள்ளுபடிகளைப் பெற வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

4) கூடுதலாக என்ன செய்ய முடியும்?

பல வங்கிகள் ரூபே கிரெடிட் கார்டுகளில் UPI வழங்குகின்றன. இது பக்கத்து கடையிலோ அல்லது பல்பொருள் அங்காடியிலோ பணம் செலுத்துவது மிகவும் வசதியாக இருக்கும்.

5) அதிகப்படியான ரிவார்ட்களை வாங்கும் திறமை

பொதுவாக வங்கிகள் தனித்தனியே சில ரிவார்ட்ஸகளை வழங்கும். அப்படியான நேரங்களில் என்னென்ன ஆஃபர்கள் உள்ளன? இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் ரிவார்ட்ஸ் என்னென்ன என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Credit Growth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment