Advertisment

அட வீட்டுக்கே வந்து போன் நம்பர் அப்டேட் செய்கிறார்களாம்... ஆதாரின் புதிய அப்டேட் என்ன?

Aadhaar Card News: போஸ்ட்மேன் உதவியுடன் வீட்டு வாசலில் ஆதார் அட்டையில் மொபைல் எண்களை புதுப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
How to Change your Mobile Number in Aadhaar Card - உங்கள் ஆதார் அட்டையில் கைபேசி எண்ணை எவ்வாறு மாற்றுவது?

அரசின் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாகிவிட்டது. ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் சம்பந்தப்பட்ட மையத்திற்கு செல்லாமல் சுலபமாக அப்டேட் செய்யும் வசதியை UIDAI வழங்கி வருகிறது. தற்போது போஸ்ட்மேன் உதவியுடன் வீட்டு வாசலில் ஆதார் அட்டையில் மொபைல் எண்களை புதுப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம்(UIDAI) ஒப்பந்தம் செய்துள்ளன. இச்சேவை 650 இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிகளில் கிடைக்கும். 1.46 லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராமின் டக் சேவக்ஸ் (ஜி.டி.எஸ்) உதவியுடன் இந்த சேவை பெறப்படும்.

ஆதார் தொடர்பான சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் பயோமெட்ரிக் தொடர்பான திருத்தங்களுக்கு ரூ.100, டெமோகிராபிக் தொடர்பான திருத்தங்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது மொபைல் நம்பர் அப்டேட்டுக்கு ரூ.50 கட்டணம். இது குறித்து ஆதார் அமைப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும், நீங்கள் ஆதார் பி.வி.சி கார்டைப் ஆர்டர் செய்து பெறலாம். UIDAI அறிமுகப்படுத்திய மிக சமீபத்திய வகை ஆதார் அட்டை இது. ஆதார் எண், மெய்நிகர் ஐடி அல்லது பதிவு ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைனில் uidai.gov.in அல்லது Resident.uidai.gov.in மூலம் ஆர்டர் செய்யலாம். பயனர்கள் ரூ .50 கட்டணம் செலுத்துவதன் மூலம் அவ்வாறு செய்யலாம். ஆதார் பி.வி.சி கார்டு வேகமான தபால் மூலம் குடியிருப்பாளரின் முகவரிக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Uidai Aadhaar Aadhaar Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment