ஏர்டெல்லின் பிரம்மாண்டம்: ரூ 219 க்கு அளவில்லா சேவைகள்!!!

வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி ஹலோ டியூன் அமைக்க முடியும்.

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு  இன்பச் செய்தியாக மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெலிகாம் சந்தையில்  ஜியோவின் வருகைக்கு பின்னர்,   ஏர்டெல் நிறுவனம் திக்கு முக்காடியது. குறிப்பாக  ஜியோ அறிவித்த கேஷ்பேக் ஆஃபர்கள், கிவுட் வவுச்சர்கள்,  இலவச சந்தா சேவை போன்றவை ஏர்டெல் வாடிக்கையாளர்களை ஜியோவின் பக்கம் இழுத்தனர்.

அப்போது தான் வீழ்ச்சியின் ஆரம்பத்தை புரிந்துக் கொண்ட  ஏர்டெல் நிறுவனம்,  அடுத்த கட்ட முடிவுகளை எடுத்து முன்னேறியது. மிகக்குறைந்த  விலையில்  ரீசார்ஜ் திட்டம், குறைந்த விலையில் அதிக டேட்டா  என்ற  புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மீண்டும் வாடிக்கையாளர்களை ஏர்டெல் தங்களின் பக்கம் இழுத்தது.

அந்த வகையில்,  தற்போது  ஏர்டெல் நிறுவனம் ரூ. 219 க்கு பீரிப்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூ.219  ரீசார்ஜ் திட்டத்தில்,  வரம்பற்ற ஹலோ ட்யூன்ஸ் சலுகையும் கிடைக்கும். இதனை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள்  தங்கள் விருப்பப்படி  ஹலோ டியூன் அமைக்க முடியும்.

அதாவது  வாடிக்கையாளர்கள் ரூ. 219 க்கு ரீசார்ஜ் செய்தால்,  நாள் ஒன்றுக்கு  1.4 ஜிபி  டேட்டா,  அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவை, நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ் எம் எஸ்க்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த திட்டம் 28 நாட்கள் மட்டுமே செயல்படும்.

சமீபத்தில்  ஜியோ அறிமுகப்படுத்திய ரூ. 198  பிரீப்பெய்ட் திட்டத்தில்,  வாடிக்கையாளர்களுக்கு  நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா,  அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவை, நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ்க்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். 28 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு மொத்தம, 56 ஜிபி டேட்ட வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

×Close
×Close