30 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்த ஏர்டெல்!!!

இந்த இரண்டு நிறுவனங்கள் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது.

வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு இன்ப செய்தியாக ஏர்டெல் நிறுவனம்,  30 ஜிபின் டேட்டாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

டெலிகாம்  சந்தையில், ஜியோவிற்கும் – ஏர்டெல்லிற்கும் இடையே நடைபெறும் போட்டாப்போட்டி நாடு அறிந்த ஒன்று. வாடிக்கையாளர்களை, கவரும், அவர்களை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த இரண்டு நிறுவனங்கள் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு  சலுகைகளை  அறிவித்து வருகிறது.

இவர்களுக்கு இடையே உள்ள போட்டியில், வாடிக்கையாளர்கள் நல்ல பயனை பெற்று வருகின்றன.  ஜியோவின் வருகை பின்னர் சொல்ல வேண்டாம்.  2ஜி யூசர்கள் எல்லாம் 4ஜிக்கு மாறினார்கள். அத்துடன் ரீசார்ஜ் திட்டங்களில் கேஷ்பேக் ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள்,  கூப்பன்கள் என  ஜியோ அடுத்த பாய்ச்சலுக்கு பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து.  ஏர்டெல் நிறுவனம்   சில குறிப்பிட்ட ஸ்மார்ட்ஃபோன்களை  வாங்கினால் அதில், ஏர்டெல் சார்பில் கேஷ்பேக் சலுகைகளை வழங்குவதாக தெரிவித்தது.

இதுப்போல பல சலுகைகளை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்  வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவித்து வந்தனர். அந்த வகையில், தற்போது ஏர்டெல்   போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த சலுகைப் பெற, ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள்  51111 என்ற நம்பருக்கு கால் செய்ய வேண்டும். அல்லது, மை ஏர்டெல் ஆப்பில் சென்று  முழு விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம்   என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close