ஜியோவுடன் போட்டி... ரூ.149 க்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா!

ஏர்டெல்லின் இந்த திட்டம் நேரடியாக ஜியோவின் ரூ 149 ரீசார்ஜ் திட்டத்துடன் களத்தில் இறங்குகிறது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 149 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

டெலிகாம் மார்க்கெட்டில் ஜியோ – எர்டெல் நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. போட்டி முனைப்பில் இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருவது வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.

ரீசார்ஜ் திட்டங்களில் கூட புதிய புதிய மாற்றங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர பல்வேறு முயற்சிகளை இரண்டு நிறுவனங்களும் எடுத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 149 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ரூ.149 ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா , அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்சமயம் இந்த சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல். ஏர்டெல்லின் இந்த திட்டம் நேரடியாக ஜியோவின் ரூ 149 ரீசார்ஜ் திட்டத்துடன் களத்தில் இறங்குகிறது.

ஜியோ ரூ. 149 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வீதம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு நேரடியாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 149 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதேபோல் ரூ.399 ரீசார்ஜ் திட்டத்திலும் ஏர்டெல் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2.4ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

×Close
×Close