Advertisment

ஏர்டெல்லின் மலைக்க வைக்கும் ஆஃபர் : வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 க்கு நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்!

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 100 GB இலவச டேட்டா கிடைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Unlimited Airtel Recharge Offers, Airtel 3 long-term prepaid recharge plans

Unlimited Airtel Recharge Offers

#airtelthanks என்ற சலுகை மூலம் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மலைக்க வைக்கும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

Advertisment

டெலிகாம் சந்தையில், ஜியோவிற்கும் – ஏர்டெல்லிற்கும் இடையே நடைபெறும் போட்டாப்போட்டி நாடு அறிந்த ஒன்று. வாடிக்கையாளர்களை, கவரும், அவர்களை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த இரண்டு நிறுவனங்கள் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது.

#AirtelThanks ஆஃபர்:

இவர்களுக்கு இடையே உள்ள போட்டியில், வாடிக்கையாளர்கள் நல்ல பயனை பெற்று வருகின்றன. ஜியோவின் வருகை பின்னர் சொல்ல வேண்டாம். 2ஜி யூசர்கள் எல்லாம் 4ஜிக்கு மாறினார்கள். அத்துடன் ரீசார்ஜ் திட்டங்களில் கேஷ்பேக் ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள், கூப்பன்கள் என ஜியோ அடுத்த பாய்ச்சலுக்கு பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து. ஏர்டெல் நிறுவனம் சில குறிப்பிட்ட ஸ்மார்ட்ஃபோன்களை வாங்கினால் அதில், ஏர்டெல் சார்பில் கேஷ்பேக் சலுகைகளை வழங்குவதாக தெரிவித்தது.இதுப்போல பல சலுகைகளை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவித்து வந்தனர்.

அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்பெட் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி ரூ. 499க்கு மேல் ரீசார்ஜ் திட்டங்களை பின்பற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 1,500 ரூபாய் மதிப்புள்ள நெட்ஃப்ளிக்ஸ் சேவை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.மாதத்துக்கு 199 ரூபாய்க்கு மேல் செலவிடும் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ZEE5-ன் ப்ரீமியம் சேவைகளைப் பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுளது. இதை ஏர்டெல் டிவி ஆப் மூலம் மட்டுமே பார்க்கமுடியும். இதேபோல ஃப்ளிப்கார்ட் எக்ஸ்க்ளூசிவ் மொபைல் போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 100 GB இலவச டேட்டா கிடைக்கும்.

நெட்ஃபிளிக்ஸ் சந்தாவினை ஏர்டெல் டி.வி. ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலமாகவும் பெற முடியும்.

Jio Recharge Plan Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment