Ankiti Bose’s Zilingo : தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருமானம் மற்றும் லாப மதிப்பை கணக்கிட்டு அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்பு வருடா வருடம் யூனிகார்ன் மற்றும் யூனிகார்ன் தலைமை செயல் அதிகாரி அந்தஸ்த்தினை வழங்கி சிறப்பிக்கும்.
அப்படியாக இந்த வருடம் மும்பையைச் சேர்ந்த அங்கித்தி போஸ்ஸிற்கு இப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இவருடைய நிறுவனம் 100 கோடி டாலர்கள் சந்தை மதிப்பில் இயங்கி வருகிறது என்பாது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் முன்னேற்றம், பெண்ணுரிமை, சம உரிமை என்று வாதங்கள் பேசினாலும், நிஜ வாழ்வில் அதனை பயன்படுத்தி முன்னேறியவர்களின் பட்டியல் என்றால் அதில் குறைவான பெண்கள் தான் இடம் பெறுகிறார்கள்.
ஒரு பில்லியன் டாலர் வரை சொந்தமாக வர்த்தகம்/நிறுவனம்/அல்லது சொந்தமாக தொழில் நடத்தும் தொழிலதிபர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது பிட்ச்புக். 239 புதிய தொழில் முனைவோர்களின் பட்டியலில் வெறும் 23 பெண்கள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளனர்.
அங்கித்தி போஸ் சீக்கௌசியா நிறுவனத்தில் அனலிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். துருவ் கபூர் இருவரும் 2014ம் ஆண்டில் பெங்களூரில் ஒரு கேமிங் ஸ்டுடியோ ஒன்றில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார். அவர்களின் கனவுகள் ஒரே மாதிரியாக இருந்தது.
Ankiti Bose’s Zilingo – 27 வயதில் சாதனை படைத்த அங்கித்தி
4 மாதங்களில் தங்களின் வேலையில் இருந்து வெளியேறி 30 ஆயிரம் டாலர்களை முதலீடாக கொண்டு தங்களின் புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள். ஆன்லைன் வர்த்தகம், கூகுளின் வளர்ச்சி, இணைய பயன்பாடு இவர்களின் நிறுவனத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றது.
27 வயதான அங்கித்தி போஸ், ஆசியாவிலேயே சக்தி வாய்ந்த பெண் தலைமைச் செயல் அதிகாரிகளில் ஒருவராக இருக்கிறார் என மலேசியாவை சேர்ந்த நிறுவனமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 31,2017 முதல் 2018 மார்ச் வரையில் இந்த நிறுவனத்தின் வருமானம் 12 மடங்கு அதிகரித்துள்ளது. துருவ் கபூர் சீஃப் டெக்னாலஜி ஆஃபிசராக பணியாற்றி வருகிறார். சிறு குறு தொழில் முனைவோர்களின் உற்பத்திப் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்க்கும் பணியை தான் முதலில் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்டது அங்கித்தியின் ஜிலிங்கோ நிறுவனம்.
களப்பணியில் நின்று சவால்களை சந்திக்கும் போது தான், நிறைய தொழில் முனைவோர்கள் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம், முதலீடு ஆகியவற்றை எப்படி பெறுவது அல்லது எப்படி உபயோகிப்பது என்று பலருக்கும் தெரியவில்லை என்று அறிந்து கொண்டனர் துருவ் மற்றும் அங்கித்தி.
அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு உதவி புரியத் துவங்கியது ஜிலிங்கோ நிறுவனம். பேங்காங்கில் இருக்கும் புகழ் பெற்ற சாட்டுசாக் சந்தைக்கு சென்ற போது தான், இப்படி ஒரு நிறுவனத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் அங்கித்திக்கு ஏற்பட்டது.
15,000 சிறுகடைகள் தாய்லாந்து முழுவதும் இயங்கி வருகிறது. ஆனால் அவர்களின் எல்லைகளை ஏன் விரிவு செய்ய இயலவில்லை என்று யோசிக்கத் துவங்கியிருந்தார் அங்கித்தி.
சீகௌசியா போன்ற பெரிய நிறுவனத்தின் ஸ்டார்ட்-அப்பை வெற்றி கரமாக ஆரம்பித்த அங்கித்தி தன்னுடைய சொந்த நிறுவனத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறராம் அங்கித்தி.