Advertisment

வீட்டில் இருந்தபடி பர்சனல் லோன்: உதவுகிறது ஆதார்

Apply For Personal Loan Using Aadhar: ஆதார் மூலம் எளிதாக பர்சனல் லோன் பெறும் வழிமுறைகளை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீட்டில் இருந்தபடி பர்சனல் லோன்: உதவுகிறது ஆதார்

இன்றைய காலக்கட்டத்தில், வங்கியின் கடன் வாங்குவது எளிதான காரியமாக மாறிவிட்டது. நீங்கள் லோன் பெற தகுதி உடையவர்களாக இருந்தால் போதும், குறிப்பிட்ட சில ஆவணங்களை சம்ர்பிப்பது மூலம் லோனை பெற முடியும். தற்போது,நமது அலைச்சலை மேலும் எளிதாக்கியுள்ளது ஆதார் கார்ட்.

Advertisment

அதனை உபயோகித்து, வீட்டில் உட்கார்ந்தபடியே வங்கியில் எளிதாக பர்சனல் லோன் பெறலாம். நீங்கள் ஜஸ்ட் படிவத்தைப் பூர்த்திசெய்து, சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து செயல்முறைகளையும் ஆன்லைனிலே முடித்துக்கொள்ள முடியும்.

ஆதார் மூலம் லோன் பெறுவது எப்படி?

  • ஆதார் மூலம் லோன் பெற, முதலில் சம்பந்தப்பட்ட வங்கி செயலி அல்லது இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு லோன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில், personal loan-ஐ கிளிக் செய்தால், உங்களுக்கு லோன் கிடைப்பதற்கான தகுதி உள்ளதா என்பதைக் கண்டறியலாம்.
  • தகுதி உறுதிப்படுத்தப்பட்டதும், , Apply now கொடுக்க வேண்டும்.
  • தற்போது ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பும்படி அறிவுறுத்தப்படும். அதில், தனிப்பட்ட, தொழில் பற்றிய தகவல்கள் கேட்கப்படும்.
  • இதைத் தொடர்ந்து, அந்த வங்கியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். அதில் பேசும் வங்கி ஊழியர், விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை கேட்டறிவார். அவை சரிபார்க்கப்பட்டவுடன், உங்களது வங்கி கணக்கிற்கு லோன் தொகை வந்துவிடும்.



விதிமுறைகள்

  • ஆதார் மூலம் பர்சனல் லோன் பெற, உங்களுக்கு 23 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
  • நீங்கள் இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.
  • உங்களுக்கு அரசு, தனியார் அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் வேலை இருக்க வேண்டும்
  • கடன் மதிப்பெண் சரியாக இருக்க வேண்டும்.
  • உங்களது குறைந்தபட்ச வருமானத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு: விவசாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வசதியை பெற அப்ளை செய்யலாம்.

Aadhar Update Uidai Aadhaar Loan Scheme Pvc Aadhar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment