Advertisment

ஆரோக்கிய சஞ்சீவனி திட்டம்: முதன்முறை காப்பீட்டாளர்கள் சற்று கவனிக்கவும்

Arogya Sanjeevani Policy: அனைத்து பொது மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்களும் ஏப்ரல் 1, 2020 முதல் ஒரே விதமான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
arogya sanjeevani policy, arogya sanjeevani policy details

arogya sanjeevani policy, arogya sanjeevani policy details

Arogya Sanjeevani Policy Premium Benefits: ஆரோக்கிய சஞ்சீவனி காப்பீட்டுத் திட்டம் (Arogya Sanjeevani Policy) ஏன் அது முதன்முறை காப்பீட்டில் சேரும் நபருக்கு நன்மையாக இருக்கும்.

Advertisment

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்த முடியாது. உயர்ந்து வரும் மருத்துவ பணவீக்கம், அதிகரித்து வரும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள், கொரோனா போன்ற புதிய வைரஸ் தொற்றுகளின் திடீர் எழுச்சி இவற்றின் காரணமாக மருத்துவக் காப்பீட்டின் தேவை பலமடங்கு வளர்ந்துள்ளது. ஆனால் பல தேர்வுகள் சந்தையில் கிடைக்கும் நிலையில், தேர்ந்தெடுக்கும் முறை சிக்கலானதாகவும், நேரம் எடுப்பதாகவும் இருப்பதால் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் குழம்பி விடுகின்றனர்.

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்த Yes Bank - ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க அனுமதி

எனவே காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் ஒரு பொதுவான காப்பீட்டுத் திட்டத்தை தொடங்குவதை கட்டாயமாக்கி உள்ளது Insurance Regulatory and Development Authority (IRDAI). அதன் சமீபத்திய வழிகாட்டுதலின் படி அனைத்து பொது மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்களும் ஏப்ரல் 1, 2020 முதல் ஒரே விதமான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளது. அந்த பொதுவான காப்பீட்டுத்திட்டத்துக்கு Arogya Sanjeevani Policy என்ற பொதுவான பெயர், அத்துடன் அதை வழங்கும் நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றிருக்கும். மருத்துவ காப்பீடை எளிதானதாகவும், பொதுவானதாகவும் மாற்றுவதன் மூலம் இன்னும் அதிகப்படியான மக்களை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர வைப்பது தான் இதன் நோக்கம்.

பாலிஸிதாரர்களுக்கு நன்மைகள்

பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Standard Terms & Conditions)

குறைந்தது ஒரு லட்சம் முதல் அதிகப்பட்சமாக 5 லட்சம் வரை காப்பிடு செய்துள்ள பாலிஸிதாரர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் அடிப்படை மருத்துவ செலவுகளை ஈடுகட்டும் விதமாக ஒரு நிலையான காப்பீட்டுத் திட்டத்தை கண்டிப்பாக தர வேண்டும் என IRDAI காப்பீட்டு நிறுவனங்களிடம் கூறியுள்ளது.

Portability

மோட்டார் வாகன காப்பீட்டு திட்டங்களை பொருத்தவரை, ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து மற்றொரு காப்பீட்டு நிறுவனத்துக்கு மாறுவது சாதாரணமானது மற்றும் எளிதானது. அப்படி மாறும் போது உங்களுடைய காப்பீட்டின் நன்மைகள் வீண்போகாது. அது போல் மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் பொதுவாகும் போது ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாறுவது எளிதாகும்.

வீட்டுமனைகளில் அதிகம் முதலீடு செய்யும் மக்கள்! பங்கு சந்தைகளுக்கு இரண்டாம் இடம்!

Easy to Claim

பொதுவான சொற்கள் பயன்படுத்தப்படும் போது பாலிஸிதாரர்களுக்கு பாலிஸி குறித்து எளிதில் படித்து புரிந்துக் கொள்ள முடியும். மேலும் அது claim செயல்முறையை எளிதாக்கும்.

Low Cost

அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஒரு பொதுவான காப்பீட்டுத் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதால் போட்டியின் காரணமாக பாலிஸியின் பிரிமியம் தொகை குறைவாகவே இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment