வெறும் 10 ரூபாயில் இப்படித் திட்டமா? அரசு ஊழியர் அல்லாதவர்களும் பென்ஷன் பெறலாம்!

Atal Pension Yojana : தினமும் ரூ.10 செலுத்தி மாதம் ரூ.5000 ஓய்வுதியம் பெறும் வகையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பயன்படுகிறது.

pension scheme

 Atal Pension Yojana Tamil News: உங்கள் நிதிகளை பற்றி திட்டமிடும்போது, ​​சரியான முதலீட்டு விருப்பங்களுக்கு தேர்வு செய்வது அவசியம். இதில் மாத ஓய்வூதிய திட்டத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, அமைப்புசாரா துறை மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படும் அடல் பென்ஷன் யோஜனா (APY) என்ற திட்டம் பெரும் பயன் தரும். இந்த ஓய்வூதியத் திட்டம் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்களை ஓய்வூதியத்திற்காக தானாக முன்வந்து சேமிப்பதை ஊக்குவிக்கிறது.

சிறு வயதிலேயே ஒருவர் இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்தால் 60 வயதை எட்டிய பின்னர், இந்த திட்டத்திற்கு ரூ. 1,000, ரூ .2,000, ரூ .3,000, ரூ .4,000 அல்லது ரூ .5,000 நிலையான ஓய்வூதியம் கிடைக்கும் என்றும் திட்டத்தின் அதிகபட்ச நன்மைகளைப் பெற முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் என்ன வழங்குகிறது?

இந்த ஓய்வூதிய திட்டம் ஒரு முதலீட்டாளருக்கு 60 வயதிற்கு பிறகு ரூ .1,000 முதல் ரூ .5,000 வரை நிலையான ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பைத்தை கொடுக்கிறது. சரியான ஓய்வூதியத் தொகை ஒருவரின் வயது மற்றும் அவர் செலுத்தும் தொகையின் அடிப்படையில் மட்டுமே இது தீர்மானிக்க முடியும். உதாரணமாக, இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவர் தனது பங்களிக்கத் தொடங்கும் வயது மற்றும் அவர் தேர்ந்தெடுக்கும் ஓய்வூதிய அடுக்கு ஆகியவற்றைப் பொறுத்து, இந்த பங்களிப்புகள் மாதத்திற்கு ரூ .42 முதல் 1,318 வரை மாறுபடலாம்.

22 வயதான தனிநபர் ஒரு மாத ஓய்வூதியாக ரூ .1,000 பெற வேண்டும் எனில், அவர் மாத்த்திற்கு ரூ .59 செலுத்த வேண்டும். மாதந்தோறும் ரூ .5 ஆயிரம் ஓய்வூதியம் பெற, அதே வைப்புத்தொகை மாதத்திற்கு ரூ .292, செலுத்த வேண்டும். ஒருவர் இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 39 வயது வரை முதலீடு செய்யலாம், இருப்பினும், முதலீட்டாளர் 60 வயதை அடைந்த பின்னரே ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில், வைப்புத்தொகையாளர் மரணமடைந்தால், அவரது மனைவி அல்லது மகன்/மகள் ஓய்வூதியத்தை கோரலாம். இருப்பினும், வைப்புத்தொகையாளர் 60 வயதை எட்டுவதற்கு முன்பு இறந்துவிட்டால், வாழ்க்கைத் துணைவரைப் பொறுத்து இந்தத் திட்டத்தை மீதமுள்ள காலத்திற்கு தொடரலாம் அல்லது வெளியேறலாம். பி.எஃப்.ஆர்.டி.ஏ படி, வைப்புத்தொகையாளரின் மரணம் அல்லது நோய்வாய்பட்டால், இந்த திட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேற விருப்பம் உள்ளது.

அடல் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க, நீங்கள் அனைத்து வங்கிகளையும். அனுகலாம். கிட்டத்தட்ட அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்ய விருப்பத்தை வழங்குகின்றன. இந்த ஓய்வூதிய திட்டத்திற்கான படிவங்கள் ஆன்லைனிலும் கிடைக்கின்றன, அவை வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து அணுகப்படலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Atal pension yojana monthly pension of rs 5000 by depositing less than rs 10 a day

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com