Advertisment

உங்கள் குழந்தைகளுக்கு ஆதார் வாங்க வேண்டுமா? இந்த ஆவணங்கள் கட்டாயம் தேவை

குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், அலைபேசி எண் மற்றும் இதர தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

author-image
WebDesk
New Update
உங்கள் குழந்தைகளுக்கு ஆதார் வாங்க வேண்டுமா?  இந்த ஆவணங்கள் கட்டாயம்  தேவை

Baal Aadhaar Card : 5 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு நீல நிறத்தில் ஆதார் கார்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்தவிதமான பயோமெட்ரிக் தகவல்களும் தேவையில்லை. இருப்பினும் 5 முதல் 15 வயது குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் தரவுகளை தர வேண்டும் என்பது கட்டாயமாகும். ரேகை மற்றும் கண்களின் ஐரிஸ் ஆகியவை பதிவு செய்யப்படாது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் புகைப்படம் மட்டுமே ஆதார் அட்டைக்கு போதுமானதாக இருக்கும்.

Advertisment

இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்ன?

UIDAI வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி, உங்கள் குழந்தைகளுக்கு ஆதார் அடையாள அட்டை வேண்டும் என்றால் உங்களிடம் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் சம்மரி மற்றும் குழந்தையின் பெற்றோர்கள் ஒருவரின் ஆதார் அடையாள அட்டை எண் ஆகியவை தேவை. பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவையும் மாற்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி விண்ணப்பம் அனுப்புவது?

UIDAI இணையத்திற்கு முதலில் செல்ல வேண்டும். பிறகு ஆதார் ரெஜிஸ்ட்ரேஷன் ஆப்சனை தேர்வு செய்யுங்கள்.

குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், அலைபேசி எண் மற்றும் இதர தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

முகவரி, இடம், மாநிலம் போன்ற இதர தரவுகளையும் பதிவு செய்ய வேண்டும்

தற்போது Appointment என்ற ஆப்சனை அங்கே தேர்வு செய்ய வேண்டும்

பிறகு அருகில் இருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் மையத்தை தேர்வு செய்து அப்பாய்ண்மெண்ட் பெறவும். தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு நேரில் செல்லவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment