Advertisment

அதிர்ச்சி தகவல் சொன்ன லஷ்மி விலாஸ் வங்கி.. ரூ. 25,000 மேல் பணம் எடுக்க நோட் பண்ணிக்கோங்க!

அவசர செலவுகள், மருத்துவ சிகிச்சை, கல்வி கட்டணம் செலுத் cv துதல், திருமண செலவுகள் என முக்கியமான செலவுகளுக்கு விலக்கு.

author-image
WebDesk
New Update
home loan home loan interest home loan

home loan home loan interest home loan

bank lakshmi vilas bank lakshmi vilas : சமீப காலமாக வங்கிகள் தொடர்ந்து அதிர்ச்சி தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகின்றன. கடந்த வாரம், பணம் எடுத்தாலும் சரி டெபாசிட் செய்தாலும் சரி ரூ.100 கட்டணம் என்று தெரிவித்தது பாங்க் ஆஃப் பரோடா அதனைத்தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியும்.

Advertisment

இந்நிலையில், தற்போது, லஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று 18.11.20 முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பற்றி நிதியமைச்சகம் அறிவிக்கும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு லட்சுமி விலாசு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்று தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவசர செலவுகள், மருத்துவ சிகிச்சை, கல்வி கட்டணம் செலுத் cv துதல், திருமண செலவுகள் என முக்கியமான செலவுகளுக்கு விலக்கும், தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு, மத்திய ரிசர்வ் வங்கி RBI-இன் அனுமதி தேவைப்படும். இந்த அறிவிப்பை கேட்ட வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தவறுதலாக பல தகவல்களை அரைகுறையாக புரிந்துக் கொண்டுள்ளனர். முடிந்தவரை இந்த தகவலை முழுமையாகவும் விரிவாகவும் மற்றவர்களுக்கு பகிருங்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment