Advertisment

இப்ப விட்டா அப்புறம் எப்பவும் வராத வாய்ப்பு.. அரை மணி நேரத்தில் பிரபல வங்கியில் கடன் வசதி!

மொபைல் பேங்கிங், இண்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றில் இந்த வசதியின் கீழ் வாடிக்கையாளர்கள் உடனடி ஒப்புதல் பெறமுடியும்.

author-image
WebDesk
New Update
SBI annuity scheme, investment scheme

bank loan bank loan apply online ; இந்தியாவின் மூன்றாவது பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா, தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடிக் கடன் வசதியைக் கொண்டுவந்துள்ளது. கடன்களுக்கான ஒப்புதலை டிஜிட்டல் வழியில் வழங்குவதற்காக தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக கடனுக்கான ஒப்புதலை ஆன்லைன் மூலமாக மிக விரைவாகப் பெறமுடியும். வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுவதால் அதை எளிதாக்க டிஜிட்டல் ஒப்புதல் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

ரீட்டைல் ஷாப்பிங் செய்வதற்கும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வாடிக்கையாளர்கள் நுண் தனிநபர் கடன் வாங்கிக்கொள்ளலாம். இதற்கான கடன் பெறும் ஒப்புதலை பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் எம்- கனெக்ட் செயலி மூலமாக 60 நொடிகளில் பெறமுடியும். இதில் வாங்கும் கடனை 3 மாதம் முதல் 18 மாதங்கள் வரையில் வாடிக்கையாளர்கள் ஈஎம்ஐ முறையில் செலுத்தலாம். புதிய வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை 30 நிமிடங்களில் பெறலாம். வாடிக்கையாளர்களின் விவரங்கள் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்டு கடனுக்கான ஒப்புதல் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் வலைதளம், மொபைல் பேங்கிங், இண்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றில் இந்த வசதியின் கீழ் வாடிக்கையாளர்கள் உடனடி ஒப்புதல் பெறமுடியும். இவ்வங்கியில் நிலையான வைப்புத் தொகையின் கீழ் சேமிக்கும் வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் உடனடிக் கடன் பெறலாம் என்று பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் பல்வேறு வங்கிகள் இதுபோன்ற உடனடிக் கடன் ஒப்புதல் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment