Advertisment

உங்க சேமிப்பு சதவீதம் சரிதானா? கொஞ்சம் சுய பரிசோதனை பண்ணுங்க பாஸ்!

தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நீண்ட நாள் இலக்குகளை எட்ட சேமிப்பு மட்டும் பத்தாது. ஒருவர் தன்னுடைய வருமானத்தில் 10 - 20%-த்தை பணமாக வங்கியில் சேமிப்பது பொதுவாக உள்ளது.

author-image
WebDesk
New Update
போஸ்ட் ஆபீஸில் குழந்தைகள் பெயரில் அக்கவுண்ட்: இதில் என்ன லாபம்?

Bank news in Tamil : ஒருவர் தன்னுடைய வாழ்நாள் சம்பாத்தியத்தினை சேமித்து வைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. மிகவும் பாதுகாப்பான சேமிப்பு வழிமுறைகளை நம்முடைய தாத்தா பாட்டியினர் மேற்கொண்டனர். குறிப்பாக வங்கி டெபாசிட்கள், பி.பி.எஃப்., தங்கம், ஆர்.டி, சேமிப்புப் பத்திரங்கள் இவற்றில் முக்கியமானவையாக இருக்கிறது. ஆனால் இன்றைய காலத்தில் வேலைக்கு செல்லும் தலைமுறையினரின் சேமிப்பை மாற்று லென்ஸ்கள் பொறுத்தி தான் பார்க்க வேண்டும்.

Advertisment

முன்பை விட இன்று சேமிப்பை மேற்கொள்வதற்கு பலதரப்பட்ட வழிகள் உள்ளன. அதனால் தான் எங்கே தங்களின் சேமிப்பு பாதுகாப்பாக இருக்கும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டு கடைசியில் தவறான முதலீட்டில் தங்களின் சம்பாத்தியத்தை கரைத்துவிடுகின்றனர்.

RenewBuy நிறுவனத்தின் இணை நிறுவனரான இந்தரனீல் சாட்டர்ஜி நுகர்வோர் தங்கள் கார்பஸை உருவாக்குவதற்கும், அவர்களின் சேமிப்பு சதவீதத்தை அதிகரிப்பதற்கும் பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பார்க்க வேண்டும்.

நிலையான வைப்பு நிதி, பி.பி.எஃப்., தங்கம், ரிக்கரிங்க் டெபாசிட்ஸ் போன்றவையே மிகவும் பாதுகாப்பான சேமிப்பாக பெரும்பான்மை மக்களால் பார்க்கப்படுகிறது. ன; இருப்பினும், பாரம்பரிய முதலீட்டு வழிகள் இப்போது புதுமையான தீர்வுகளால் மாற்றப்பட்டுள்ளன, அவை அதிக வருமானத்திற்கு வழிவகுக்கும். முறையான முதலீட்டுத் திட்டம், மியூச்சுவல் ஃபண்டுகள், பீயர் டூ பியர் கடன் வழங்கும் வரை, பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. ஆனாலும் இதில் இருக்கும் ரிஸ்க்-ரிவார்ட் அம்சங்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற சூழ்நிலைகளில் சரியான திசையில் வழிகாட்ட நிதி ஆலோசகர் எப்போதும் பரிந்துரைக்கப்படுவார்.

நீங்கள் ஏன் உங்களின் சேமிப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும்?

நுகர்வோர் ஒரு பக்கம் சேமித்துக் கொண்டே இருக்கும் அதே வேளையில் பணம் வீக்கமும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பதை அவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்உம். ஒருவரின் தேவைகள் மற்றும் ஆசைகளுக்காக தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திற்காகவும் ஒருவர் சேமித்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நீண்ட நாள் இலக்குகளை எட்ட சேமிப்பு மட்டும் பத்தாது. ஒருவர் தன்னுடைய வருமானத்தில் 10 - 20%-த்தை பணமாக வங்கியில் சேமிப்பது பொதுவாக உள்ளது. ஆனால் கூட்டு சக்தியில் இது பலன் அடையாது. பண வீக்கத்தை வெல்ல இது நிச்சயமாக உதவாது.

முன்கூட்டியே முதலீடு செய்யத் தொடங்குவதும், சமச்சீரான பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதும் முக்கியம், ஆனால் அதைச் செய்வது மட்டும் பணவீக்கத்தை வெல்லாது. இலக்கு அடிப்படையிலான முதலீடுகள் தனிநபருக்கு தெளிவைக் கொடுக்கும், இருப்பினும், அதனுடன் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 10-15 சதவிகிதம் தங்கள் சேமிப்பை அதிகரிக்க வேண்டும், இதனால் இலக்குகளை எளிதாக நிறைவேற்ற முடியும் என்று துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குழந்தையின் கல்வி, திருமணம், ஓய்வூதியம் அல்லது சுகாதாரச் செலவுகள் போன்ற நீண்ட கால இலக்குகளை நிறைவேற்ற, வேலை செய்யும் வயதிலேயே ஒருவர் தீவிரமாகச் சேமிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதோடு, முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவை அவ்வப்போது கண்காணித்து, ஆண்டுக்கு 2-3 முறையாவது தங்கள் நிதிகளை முழுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் நிதிகள் சிறப்பாகச் செயல்படுகிறதா அல்லது சில முதலீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்பதை இதன் மூலம் நீங்கள் கண்டறியலாம் என்று சாட்டர்ஜீ கூறுகிறார்.

ஒரு நபர் தன்னுடைய வருமானத்தை சேமிக்கும் போது தங்களின் குடும்பத்தினருக்கு எந்த விதமான எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு வாழ்நாள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டை எடுக்க வேண்டும். காப்பீடு நீங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த நிதியை பாதுகாக்க நிச்சயமாக உதவும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Finance
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment