பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரூ.100 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் நாடு முழுவதும் ‘பரோடா கிசான் பக்வாடா’ விவசாயிகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கான ஆண்டு விழிப்புணர்வு முகாம்
நவம்பர் 15 முதல் 30 வரை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள, 161 வங்கிக் கிளைகள் மூலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 20,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு, வேளாண் கடன்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயிகள் சந்திப்பு, மண் பரிசோதனை முகாம், விலங்குகளுக்கான மருத்துவ முகாம் ஆகியவை நடத்தப்பட்டன. இந்த நிகழச்சி மூலமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, 134 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
பாங்க் ஆப் பரோடா பொது மேலாளரும், சென்னை மண்டலத் தலைவருமான சரவணக்குமார் கூறுகையில், “விவசாயிகளை நேரடியாக சந்தித்து விவசாயிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள், நிதி உதவிகள் குறித்து விவரித்தோம். மேலும் பல்வேறு வகையான விவசாயக் கடன்கள், வங்கிச் சேவைகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil