Advertisment

வட்டி விகிதம் அதிரடி குறைப்பு: லாபகரமான 'ஹோம் லோன்' தேர்வு செய்ய 5 சுலப வழிகள்

6.50%ல் இருந்து ரெப்போ விகிதம் 4% ஆக 2020ம் ஆண்டு குறைந்த போது வங்கிக் கடன் விகிதங்களும் குறைவை கண்டன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விருப்பமா? அப்போ இந்த 5 விஷயத்துல கவனமா இருங்க!

Banking news in Tamil : இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வீட்டு கடன்களுக்கான குறைந்த வட்டியானது 6.75% இருந்தது. பலர் 6.95% என்ற ரீதியில் வட்டிகளை வழங்கி வந்தனர். இந்தியாவில் இந்த அளவுக்கு குறைவான வட்டி விகிதம் இருந்ததே இல்லை. இதுவே பலருக்கு மகிழ்ச்சி அளித்து வந்த நிலையில் மேலும் வட்டி விகிதம் குறைய துவங்கியது. 6.75% என்பது 6.50% ஆக குறைந்தது. 6.95%-ல் இருந்து குறைந்தது 20 புள்ளிகள் குறைக்கப்பட்டு தற்போது வீட்டுக் கடனுக்கு வட்டி வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் உங்களுக்கான முதல் வீட்டை கட்ட நினைக்கிறீர்கள் என்றால் இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் கட்டாயமாக உதவும்.

Advertisment

உண்மையான வட்டி விகிதம் என்ன?

தற்போது குறைவான வட்டியில் வீட்டுக்கடன்கள் வழங்கப்பட்டாலும், நீங்கள் இந்த வட்டியில் வீடுக்கடன் வாங்கும் தகுதியை கொண்டிருக்கிறீர்களா அல்லது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் இத்தகைய வட்டிகள் கிடைக்குமா என்ற கேள்வி எழலாம். உதாரணமாக அரசு வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி 6.70%ல் இருந்து 7.50% வரை வழங்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே அதனை வாங்க முடியும். வயது, வருமானம், கிரெடிட் ஸ்கோர், லோனின் அளவு, லோன் டூ வேல்யூ ரேசியோ ஆகியவை அடிப்படையில் தான் வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் சம்பாதிக்கும், 810 கிரெடிட் ஸ்கோர் கொண்ட, ரூ. 30 லட்சத்திற்கும் குறைவாக வீட்டுக் கடன் வாங்க விண்ணப்பித்திருக்கும் பெண்ணாக இருந்தால், சில கடன் வழங்கும் நிறுவனங்கள் வைத்திருக்கும் அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு குறைவான வட்டியில் வங்கிக் கடன் கிடைக்கலாம். ஆனால் இந்த அளவீடுகளில் மாறுபாடுகள் இருந்தால் உங்களின் வங்கிக் கடன் வட்டியிலும் மாறுபாடுகள் இருக்கும். நீங்கள் சுய தொழில் புரிபவர்களாக இருந்தால் 10 அடிப்படை புள்ளிகள் கூடுதலாகும். உங்களின் வங்கிக் கடன் ரூ. 75 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் மேலும் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கும். உங்களின் க்ரெடிட் ஸ்கோர் 750க்கும் குறைவாக இருந்தால் மேலும் 10 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதத்தில் அதிகரிக்கும்.

அளவுகோள் என்ன?

பெஞ்ச்மார்க் விகிதம் என்பது கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் தங்களின் லோனை விற்க இருக்கும் குறைவான விகிதத்தை குறைக்க உதவும் பதம். 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அனைத்து வங்கி சார் வீட்டுக்கடன்கள் அனைத்தும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 6.50%ல் இருந்து ரெப்போ விகிதம் 4% ஆக 2020ம் ஆண்டு குறைந்த போது வங்கிக் கடன் விகிதங்களும் குறைவை கண்டன. வங்கிகள் ரெப்போ விகிதம் போன்ற வெளிப்புறமாக நிர்ணயிக்கப்பட்ட விகிதத்திற்கு அளவுகோலாக இருக்க வேண்டும். ஆனால் NBFC கள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் சொந்த நிர்ணயங்களை வரையறை செய்யலாம். இந்த வகையில் மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடன் விகிதங்கள் விரைவாக சரிய துவங்கின. இது வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. எனவே ரெப்போ உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கடன்கள் தற்போது மக்கள் விரும்பும் ஒன்றாக மாறிவிட்டது. அதே நேரத்தில் ரெப்போ விகிதங்கள் அதிகரிக்கின்ற போது அதன் தாக்கம் வீட்டுக் கடன் விகிதங்களிலும் இருக்கும். நன்மை என்னவென்றால் விகித இயக்கங்களில் முழு வெளிப்படைத்தன்மையை கடன் வாங்கியவர்கள் அறிந்து கொள்ள இயலும்.

வங்கிக் கடனை வாங்க என்ன செலவாகும்?

வாங்கும் கடனுக்கான வட்டியை மட்டும் பொறுத்து உங்களின் செலவு இருக்காது. ப்ரோசசிங் கட்டணம், லீகல் கட்டணம், கணக்கை செயல்படுத்த வாங்கப்படும் பல்வேறு கட்டணங்கள் மற்றும் ப்ரி-பேமெண்ட் செலவுகள் எல்லாம் இதில் அடங்கும். நீங்கள் பல்வேறு வங்கி சேவைகளில் இதற்கான கட்டணங்கள் குறித்து நன்றாக ஆராய்ந்து கடனை வாங்குவது நல்லது. ப்ரி-பேமெண்ட் வசதிகள் கடன் வாங்குபவருக்கு பாதகமாக முடியலாம். உதாரணமாக இரண்டு லெண்டர்கள் 6.80% வட்டியில் உங்களுக்கு கடன்களை வழங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நிறுவனம் ஒரு மாத தவணையை மட்டும் முன்பணமாக செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. ஆனால் மற்றொரு நிறுவனம் இரண்டு மாத தவணையை முன்பணமாக கட்ட கோருகிறது. இரண்டாவது நிறுவனம், முதல் நிறுவனத்தைக் காட்டிலும் ப்ரீ பே வகையில் கொஞ்சம் செலவுகளை கூட்டும் ஒன்றாக அமைந்துவிடுகிறது.

கடன் வழங்கும் நிறுவனங்களின் சேவை

உங்களுக்கும் நீங்கள் கடன் வாங்கியுள்ள நிறுவனத்திற்கும் இடையே நீண்ட கால உறவு இருக்கும் என்பதால் நீங்கள் விரும்பும் நிறுவனங்களில் உங்களின் வீட்டுக்கடனை வாங்குங்கள். கொரோனா காலம் என்பதால் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. எனவே உங்களுக்கு போன் செய்து உங்களை வங்கிக்கு வர வைக்காமல், உங்கள் வீட்டில் வந்தோ அல்லது ஆன்லைனிலோ ஆவணங்களை பெற்றுச் செல்லும் நிறுவனமாக இருக்க வேண்டும். விரைவான வாடிக்கையாளர்கள் சேவை கொண்ட நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் எவ்வளவு தொலைவில் இருக்க வேண்டும்?

உங்களின் வீட்டுக்கு அருகே உங்களின் வங்கிகள் இருப்பது நல்லது. பெரிய வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் நாடு முழுவதும் இருக்கும். ஆனால் சிறிய நிறுவனஙள், வங்கியில்லா நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் குறைவான இடங்களில் மட்டுமே கிளைகளை வைத்திருப்பார்கள். நீங்கள் அவர்களை காண வெகு தூரம் பயணிக்கும் நிலை உருவாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment