scorecardresearch

மாதம் ரூ.4,166 முதலீடு.. ரூ.10 லட்சம் கன்ஃபார்ம் ரிட்டன்.. வரி விலக்கும் உண்டு.. இந்த எல்.ஐ.சி. பாலிசியை பாருங்க

மாதம் ரூ.4166 அல்லது ஆண்டு பிரீமியம் ரூ.50 ஆயிரம் செலுத்தி ரூ.10 லட்சம் ரிட்டன் பெறும் எல்.ஐ.சி. ஜீவன் உமாங் திட்டம் குறித்து பார்க்கலாம்.

Benefits and advantages of LIC Jeevan Umang Plan
இந்தத் திட்டத்தில் ஒருவர் ரூ.10 லட்சம் ரிட்டன் பெற நீண்ட கால முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி. ஜீவன் உமாங் திட்டத்தை நிதி பாதுகாப்பு மற்றும் காப்பீடு நோக்கில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தத் திட்டத்தில் நல்ல ரிட்டன் மட்டுமின்றி, வருமான வரிச் சட்டம் 80சி-ன் படி வரி விலக்கும் அளிக்கிறது. மேலும் இதனை கூடுதல் ஆவணமாக பயன்படுத்தி கடன் வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

ரூ.10 லட்சம் ரிட்டன் பெறுவது எப்படி?

இந்தத் திட்டத்தில் ஒருவர் ரூ.10 லட்சம் ரிட்டன் பெற நீண்ட கால முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போது உங்களுக்கு 40 வயது ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இந்தத் திட்டத்தில் 20 ஆண்டு கால முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம்.

அதன்படி மாதம் ரூ.4,166 அல்லது ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் முதிர்வுக்கு பின்னர் உறுதியளிக்கப்பட்ட வருமானமாக ரூ.10 லட்சம் கிடைக்கும்.

மேலும் முதலீட்டாளர் பாதியில் இறக்க நேரிட்டால் பாலிசி காப்பீடு தொகை ரூ.10 லட்சம் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் 8 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்ட நபர்கள் இணையலாம். குறைந்தப்பட்ச காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் ஆகும். அதிகப்பட்ச காப்பீடு தொகைக்கு கட்டுப்பாடு கிடையாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Benefits and advantages of lic jeevan umang plan

Best of Express