Advertisment

எம்-ஆதார் செயலியால் இவ்வளவு நன்மையா? உடனே டவுன்லோட் பண்ணுங்க!

Benefits of mAadhaar: ஆதார் அட்டைதாரர்கள் வலைத்தளம் அல்லது mAadhaar செயலியை பயன்படுத்தி ஒரு முறை கடவுச்சொல் (OTP) வழியாக அங்கீகாரம் மூலம் இழந்த அல்லது தொலைத்த UID / EID எண்ணை மீட்டெடுக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
m aadhaar

ஆதார் தொடர்பான அனைத்து விவரங்களையும் UIDAI ஆணையம் நிர்வகித்து வருகிறது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் டிஜிட்டல் முறையில் ஆதார் நகலை வைத்துக்கொள்ள முடியும். இதற்காக, UIDAI வலைதளத்திலோ அல்லது mAadhaar செயலியிலோ பதிவு செய்து டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது mAaadhar செயலியில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இதனை பெறுவதற்கு பழைய செயலியை uninstall செய்து புது versionஐ install செய்ய வேண்டும். mAadhaar செயலியை வாடிக்கையாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதார் அதன் சமீபத்திய அப்டேட் குறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

mAadhaar செயலியின் பயன்கள்

1) உங்கள் ஆதார் அட்டையை தொலைத்துவிட்டால் இந்த செயலி மூலம் ஆதாரை பதிவிறக்கம் அல்லது ரீ பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

2) உங்கள் mAadhaar செயலியில் 5 ஆதார் சுயவிவரங்களை நீங்கள் சேர்க்கலாம்.

3) உங்கள் UID, ஆதார் எண் அல்லது பயோமெட்ரிக்கை எப்போது வேண்டுமானாலும் லாக், அன்லாக் செய்து கொள்ளலாம்.

4) வாடிக்கையாளர்களின் ஆதார் சரிபார்ப்பைத் தேடும் சேவை வழங்குநர்களுடன் eKYC அல்லது QR குறியீட்டைப் பகிரவும் செயலியை நீங்கள் பயன்படுத்தலாம்.

5) ஆதார் அட்டைதாரர்கள் வலைத்தளம் அல்லது mAadhaar செயலியை பயன்படுத்தி ஒரு முறை கடவுச்சொல் (OTP) வழியாக அங்கீகாரம் மூலம் இழந்த அல்லது தொலைத்த UID / EID எண்ணை மீட்டெடுக்கலாம்.

6) ஆதார் ஆஃப்லைன் பயன்முறையில் காண்பிக்க mAadhaarஐப் பயன்படுத்தலாம்.

7) யூசர்களுக்கு VIDயை உருவாக்க இந்த செயலி உதவுகிறது.

mAadhaar Appஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?

கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து mAadhaar appஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

செயலியில் உள்நுழைந்து மெயின் டாஷ்போர்டின் மேல் காணப்படும் Register Aadhaar என்ற டேபை கிளிக் செய்ய வேண்டும்.

மேலும் 4 இலக்க பின் (pin) மற்றும் கடவுச்சொல்லை (password) உருவாக்கவும்

அதன் பிறகு ஆதார் எண்ணை டைப் செய்து ஆதார் ப்ரொபைல் காணலாம்.

மேலும் தகவல்களுக்கு uidai.gov.in. என்ற இணையதள முகவரியை அணுகவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Uidai Aadhaar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment