Advertisment

மாதம் ரூ2 லட்சம் வரை வருமானம்; 85% அரசு மானியம்; பணம் கொட்டும் பிசினஸ் ஐடியா!

குறைந்த முதலீடு; 85% வரை அரசாங்க மானியம்; அருமையான தொழில் வாய்ப்பு பற்றிய முக்கிய தகவல்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாதம் ரூ2 லட்சம் வரை வருமானம்; 85% அரசு மானியம்; பணம் கொட்டும் பிசினஸ் ஐடியா!

Best business idea earn upto Rs.2 lakh per month in Beekeeping in Tamil: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலை தொடங்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது. அதேநேரம், அந்த தொழிலுக்கு அரசின் மானியம் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி தான். அப்படியான அருமை தொழில் வாய்ப்பு குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

விவசாயத் தொழில் தொடங்குவதில் சிறந்த விஷயம் என்ன தெரியுமா? இதற்கு குறைந்த முதலீடு தேவைப்படுவது மற்றும் லட்சக்கணக்கான மதிப்புள்ள லாபம் கிடைப்பது. மேலும் இந்திய அரசாங்கம் விவசாய வணிகங்களுக்கு பல்வேறு கடன்கள் மற்றும் மானியங்களை வழங்குவதன் மூலம் இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு ஆதரவளிக்கிறது.

அப்படியான ஒரு சிறந்த தொழில் வாய்ப்பு தான் தேனீ வளர்ப்பு தொழில் அல்லது தேனீ வளர்ப்பு. குறைந்த முதலீட்டில் இதை தொடங்கி மாதந்தோறும் லட்சங்களில் சம்பாதிக்கலாம். இந்தத் தொழிலில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதைத் தொடங்க அரசாங்கத்திடமிருந்து மானியமும் பெறலாம்.

தேனீ வளர்ப்பு தொழில் என்றால் என்ன?

தேனீ வளர்ப்பு என்பது குறைந்த செலவில் உள்ள சிறந்த வணிக யோசனை. தேன் மற்றும் தொடர்புடைய பொருட்களை விற்பதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள். இதற்கு உங்களிடம் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டம் இருக்க வேண்டியதில்லை. இந்த தொழிலை தொடங்குவதற்கு, நீங்கள் 50 தேனீக்கள் கூட்டத்திற்கு குறைவாக வைத்திருக்கலாம்.

தேனீ வளர்ப்பு தொழிலுக்கான அரசாங்கத்தின் மானியம்

தேசிய தேனீ வாரியம் (NBB) NABARD உடன் இணைந்து இந்தியாவில் தேனீ வளர்ப்பவர் வணிகத்திற்கு நிதியளிப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இத்துறையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் அவர்கள் உதவி செய்கிறார்கள். அருகில் உள்ள தேசிய தேனீ வாரிய அலுவலகத்திற்கு நீங்கள் சென்று விவரங்களை அறியலாம் அல்லது இணையதளத்தில் இருந்து தகவல்களைப் பெறலாம். தேனீ வளர்ப்புக்கு அரசாங்கம் 80 முதல் 85% வரை மானியம் தருகிறது. இந்த சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: IRCTC Rules: ரயில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா? இதை மறந்துட்டா பணம் கிடைக்காது!

எந்த ஒரு தொழிலையும் அதை பற்றி ஆழமாக புரிந்து கொண்டால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும். தேனீ வளர்ப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு அருகில் உள்ள (விவசாயிகள் சேவை மையம்) KVK அல்லது வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொண்டு, தேனீ வளர்ப்புப் பயிற்சியை வழங்குகிறார்களா என்று விசாரித்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

தேனீ வளர்ப்பு சந்தை எப்படி இருக்கிறது?

தேனீ வளர்ப்பில் தேனுடன் சேர்த்து தேன் மெழுகு, ராயல் ஜெல்லி, புரோபோலிஸ் அல்லது தேனீ பசை மற்றும் தேனீ மகரந்தம் போன்ற பல பொருட்கள் உள்ளன. இந்த தயாரிப்புகள் அனைத்தும் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் சந்தையில் மிகவும் விலை உயர்ந்தவை. அதாவது, சந்தையில் இவற்றிற்கான தேவை அதிகம். இந்தத் தயாரிப்புகளின் சந்தை மதிப்பைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொண்டால், நீங்கள் எவ்வாறு பணம் சம்பாதிப்பீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

தேனீ வளர்ப்பு தொழிலில் கிடைக்கும் லாபம்

தற்போதைய சந்தையில் பச்சைத் தேனின் விலை 150-200 ரூபாய், சராசரியாக 1000 கிலோ தேன் உற்பத்தி செய்ய முடிந்தால், நீங்கள் எளிதாக 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.

குறிப்பு: மேற்கண்ட தகவல் சராசரி தரவு, நீங்கள் 1000 கிலோவுக்கும் குறைவான தேனை உற்பத்தி செய்யும்போது தரவு மாறலாம், ஆனால் இந்த தொழிலை தொடர்ந்து நடத்தி வரும்போது சில வருடங்களில், உங்கள் வருமானம் கோடி ரூபாயாக மிக விரைவில் மாறும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment