Bharat Griha Rakshak policy
சமீப காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு, சூறாவளி மற்றும் புயல் போன்ற காரணங்களால் அதிகப்படியான வீடுகள் பாதிப்படைகின்றன. வீட்டிற்கு ஒரு காப்பீடு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நீங்கள் யோசித்தால் உங்களுக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது பாரத் க்ரிஹ ரக்ஷாக் திட்டம் (Bharat Griha Rakshak policy). வீடுகளுக்கான காப்பீட்டு திட்டங்கள் குறித்து மத்திய அரசு வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்ட பிறகு காப்பீட்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
நெருப்பு துவங்கி பெரும் மழை, வெள்ளை காலம், புயல், ஏன் ஏதேனும் போராட்டத்தின் போதும் உங்களின் வீடு பாதிப்பு அடைந்திருந்தால் நீங்கள் இந்த திட்டத்தின் மூலம் உங்களின் காப்பீட்டை க்ளைம் செய்து கொள்ள முடியும்.
இதனை யாரெல்லாம் பெறுவார்கள் என்று கேட்கின்றீர்களா? அனைத்து வீட்டு உரிமையாளர்களும் இந்தக் காப்பீட்டினை பெற்றுக் கொள்ளலாம். பிறகு இந்த பாலிசிக்கான காலம் 10 ஆண்டுகள் தான். மேலும் உங்களின் வீடு 40 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டிருக்க கூடாது. உங்கள் வீட்டில் இருக்கும் ஃபர்னிச்சர்கள் முதல் அனைத்தும் இந்த காப்பீட்டின் கீழ் கொண்டு வரப்படும்.
பாலிசியின் கீழ் செலுத்தப்படும் அதிகபட்ச தொகை, பாலிசி தொடக்க தேதியில் கட்டிடத்தின் தற்போதைய செலவினத்தின் அடிப்படையில் காப்பீடு செய்யப்பட்ட தொகை மற்றும் காப்பீடு செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் பிரீமியம் கணக்கிடப்படுகிறது.
பாலிசி கவரேஜ் எப்படி?
இந்த திட்டம் வீட்டில் இருக்கும் பொருட்களுக்கும் அடங்கும். மொத்தமாக செய்யப்பட்ட காப்பீட்டு தொகையில் இது 20% ஆகும். இது 10 லட்சம் உச்சவரம்புக்கு உட்பட்டது. வீட்டு சாமான்களை மட்டும் கவர் செய்கிறது என்றால் அதனை பொதுவாக general contents என்று அறிவிக்க வேண்டும். மேலும் உள்ளடக்கங்களை மாற்றுவதற்கான செலவை ஈடுகட்ட வேண்டும். இது வீட்டில் உள்ள கராஜ்கள், அவுட்கவுஸ், சுவர், வேலி, கதவு, உள் சாலை, வாகன நிறுத்தும் இடம், தண்ணீர் டேங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இரண்டு விருப்ப தேர்வுகளையும் இது வழங்குகிறது. நகைகள், வெள்ளிப் பொருட்கள், கலைப் பொருட்களுக்கான கவர் மற்றும் விபத்து காப்பீடு ஆகியவற்றை பாலிசிதாரருக்கும் அவருடைய துணைக்கும், எந்த விபத்தின் அடிப்படையில் வீட்டு காப்பீடு கேட்கிறார்களோ அந்த விபத்தின் கீழ் வழங்கபப்டும். அவர்கள் மரணம் அடைந்திருந்தால் இழப்பீட்டுத் தொகை ஒருவருக்கு ரூ .5 லட்சம் வழங்கப்படும்.
எப்படி க்ளைம் செய்வது?
முதலில் தன்னுடைய இழப்பு தொடர்பாக பாலிசி நிறுவனத்திற்கு பாலிசி எண்ணுடன் கூடிய தகவல்களை வழங்க வேண்டும். வீட்டில் ஏற்பட்டுள்ள சேதாரம் அல்லது வீடு இடர்பாடு அடைந்த 30 நாட்களுக்குள் அந்த தகவல்களை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். இழப்பு பற்றிய ஒரு சுருக்கமான அறிக்கையை, காவல்துறை அல்லது எந்தவொரு அதிகாரத்திற்கும் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை விவரங்கள், வீட்டுக் கட்டிடம் அல்லது வீட்டு சாமான்கள் தொடர்பான காப்பீட்டின் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil