Advertisment

இந்தியாவில் BS4 மற்றும் எஸ்யூவி கார்களுக்கு மெகா தள்ளுபடி

BS4 Discounts: டீசலில் இயங்கும் CR-V மாடல் கார்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. Civic மாடல் கார்களுக்கு ரூபாய் 2.5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Big discounts on BS4 cars, SUVs in India

Big discounts on BS4 cars, SUVs in India

Big discounts on BS4 cars, SUVs in India: இந்தியாவில் BS4 கார்கள் மற்றும் எஸ்யூவி (SUV) களில் மிகப்பெரிய தள்ளுபடி. Honda CR-V, Tata Nexon கார்கள் இப்போது நீங்கள் வாங்கும் விலைகளில்.

Advertisment

இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் தான் தள்ளுபடி என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. மந்தநிலையின் காரணமாக மிகவும் பாதித்தது நான்கு சக்கர வாகன விற்பனைதான். இதன் காரணமாக பல நான்கு சக்கர வாகன முகவர்களிடம் BS4 ரக வாகனங்கள் கையிருப்பு உள்ளது. இந்த கையிருப்புகளை ஏப்ரல் 1 காலகெடுவுக்குள் விற்று தீர்க்க முகவர்கள் பல சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

ரிலையன்ஸ் ஜியோ 'வாவ்' அறிவிப்பு - மீண்டும் வருகிறது ரூ.4,999 வருடாந்திர திட்டம்

Hyundai

Hyundai பெரும்பாலான தனது BS4 கையிருப்பை விற்று தீர்த்துவிட்டது. எனினும் சில கார்கள் விற்காமல் முகவர்களிடம் தேங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக பூனே வை சேர்ந்த ஒரு முகவரிடம் Creta ரக கார்கள் கையிருப்பு உள்ளது. இந்த கார்கள் மீது ரூபாய் 75,000/- வரை தள்ளுபடி மற்றும் exchange bonus ஆக ரூபாய் 50,000/- வழங்கப்படுகிறது. அதேபோல் Xcent ரக கார்களுக்கு ரூபாய் 50,000/- வரை தள்ளுபடி மற்றும் exchange bonus வழங்கப்படுகிறது. பெங்களூருவை சேர்ந்த ஒரு முகவர் தன்னிடம் உள்ள டீசலில் இயங்கும் Grand i10 ரக கார்களுக்கு ரூபாய் 30,000/- வரை தள்ளுபடி கொடுப்பதாகவும் 3 எண்ணிக்கையிலான கார்கள் இருப்பு உள்ளதாகவும் கூறுகிறார்.

Hyundai Creta அசல் ex-showroom விலை : ரூபாய் 10 லட்சம்

Hyundai Xcent அசல் ex-showroom விலை : ரூபாய் 5.50 லட்சம்

Hyundai Grand i10 டீசல் ex-showroom விலை : Rs 5.93 லட்சம்.

Toyota

மெதுவாக விற்பனையாக கூடிய தனது Yaris ரக மாடலை தவிர, Toyota விற்கு தன்னிடம் உள்ள BS4 கையிருப்புகளை விற்று தீர்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த வகை sedan ரக கார்களுக்கு Toyota கார் தயாரிப்பாளர்கள் ரூபாய் 35,000/- வரை தள்ளுபடியும் அதனுடன் ரூபாய் 35,000/- வரை exchange bonus வழங்குகிறார்கள். Yaris ரக கார்கள் இப்போது BS6 வகையில் வருகிறது ஆனால் சலுகைகள் BS4 ரக கார்களுக்கு மட்டுமே கண்டிப்பாக பொருந்தும்.

Toyota Yaris அசல் ex-showroom விலை : ரூபாய் 9.29 லட்சம்.

Tata

Tata மோட்டார் முகவர்களுக்கு BS4 வாகனனங்களை விற்று தீர்ப்பதில் சில பிரச்சனைகள் இருப்பதாகவே தெரிகிறது. புது டில்லி மற்றும் மும்பையை சேர்ந்த முகவர்களிடம் Nexon, Hexa மற்றும் Zest ரக கார்கள் கூட இன்னும் கையிருப்பில் உள்ளதாக தெரிகிறது. பெட்ரோலில் இயங்கும் Nexon ரக கார்களுக்கு exchange bonus உட்பட மொத்தத்தில் ஒரு லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. Hexa ரக கார்களுக்கு ரூபாய் 2.5 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. பூனேவை சேர்ந்த ஒரு முகவர் தன்னிடம் உள்ள இரண்டு 2019 மாடல் Zest ரக கார்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடி தருவதாக கூறுகிறார்.

Mahindra

Mahindra தனது Bolero BS6 அறிவிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளது. இந்திய கார் தயாரிப்பாளரான Mahindra தன்னிடம் உள்ள அனைத்து மாடல் கார்களையும் இன்னும் BS6 தரத்துக்கு நகர்தவில்லை. BS4 தர மாடலான KUV100 காருக்கு ரூபாய் 70,000/- வரை தள்ளுபடி மற்றும் ரூபாய் 10,000/- வரை exchange bonus கிடைக்கிறது. Marazzo ரக கார்களுக்கு ரூபாய் 1.4 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதே போல் வாடிக்கையாளர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த Scorpio ரக கார்களுக்கு முகவர்கள் ரூபாய் 60,000/- வரை தள்ளுபடி தருகின்றனர். அது போல் Alturas ரக கார்களுக்கு அனைவரையும் மயக்கும் விதமாக ரூபாய் 2.4 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.

Maruti Suzuki

சில Nexa முகவர்களிடம் வெகு குறைவான எண்ணிக்கையிலான S-Cross கார்கள் கையிருப்பில் உள்ளன. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் S-Cross ரக கார்கள் 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்சினில் விற்பனையாகப்போகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். 1.3 லிட்டர் டீசலில் இயங்கும் இந்த வகை கார்கள் அதன் பிறகு கிடைக்காது ஆனால் நீங்கள் அதை இப்போது வாங்கிக்கொள்ளலாம். இந்த கார்கள் மீது ரூபாய் 75,000/- வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. Alto 800 போன்ற சிறிய வகை கார்கள் பற்றி நீங்கள் யோசித்தால், Maruti கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே அந்த வகை கார்களில் BS6 தரத்தை அறிவித்தது ஆனால் முகவர்களுக்கு அவ்வகை புதிய தர கார்களை அனுப்பவில்லை.

கிஸான் கடன் அட்டை எச்சரிக்கை: காலக்கெடுவுக்கு பிறகு என்ன நடக்கும் தெரியுமா?

Nissan

Nissan தனது Kicks ரக கார்களுக்கு ரூபாய் 1.6 லட்சம் தள்ளுபடி வழங்குகிறது.

Renault

Renault ம் தன்னிடம் குறைந்த அளவிலான BS4 வாகனங்களை கையிருப்பு வைத்துள்ளது. Lodgy ரக கார்கள் மட்டும்தான் சில முகவர்களிடம் கையிருப்பு உள்ளது அதற்கு ரூபாய் 2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. Duster ரக கார்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.

Honda

டீசலில் இயங்கும் CR-V மாடல் கார்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. Civic மாடல் கார்களுக்கு ரூபாய் 2.5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.

Honda CR-V டீசல் அசல் ex-showroom விலை: ரூபாய் 30.77 லட்சம்

Honda Civic டீசல் அசல் ex-showroom விலை : ரூபாய் 20.65 லட்சம்

Skoda

Octavia Onyx மாடல் கார்களுக்கு ரூபாய் 2.5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. சில முகவர்களிடம் Kodiaq ரக கார்களும் கையிருப்பில் உள்ளன, அவற்றுக்கு ரூபாய் 1.67 லடசம் வரை தள்ளுபடி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Tata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment