தங்கம் மற்றும் சொத்து போன்ற மதிப்புமிக்க சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு தந்தேராஸ் மற்றும் தீபாவளி நல்ல நாளாக கருதப்படுகிறது.
அந்த வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டையும் நீங்கள் கவனிக்கலாம். ஏனெனில் அண்மையில் பல வங்கிகளும் தங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளன.
ரூ.5 லட்சம் வரையிலான வைப்புத்தொகை காப்பீடு உத்தரவாதம் உள்ளது. தற்போது, பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 1, 2, 3, 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கு வழங்கும் FD வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.
எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்கள்
ரூ.2 கோடி ரூபாய்க்கும் குறைவான சில்லறை கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை 0.8% வரை எஸ்பிஐ சனிக்கிழமை (அக். 22, 2022) முதல் திருத்தியுள்ளது.
தற்போது, 1 வருட டெபாசிட்டுக்கு 5.5% வட்டியை வழங்குகிறது. 2 மற்றும் 3 ஆண்டு காலங்களுக்கு, வங்கி முறையே 6.1% மற்றும் 6.25% வட்டி விகிதங்களை வட்டியாக வழங்குகிறது.
5 மற்றும் 10 ஆண்டு காலங்களுக்கான SBI FD வட்டி விகிதம் 6.1%. மூத்த குடிமக்களுக்கு வங்கி கூடுதல் 0.5% வட்டியையும் வழங்குகிறது.
ஹெச்.டி.எஃப்.சி., வங்கி நிலையான வைப்பு விகிதம்
ஹெச்.டி.எஃப்.சி., வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை அக்டோபர் 11, 2022 முதல் திருத்தியுள்ளது. ரூ. 2 கோடிக்கும் குறைவான வைப்புகளுக்கு, HDFC வங்கி 1 மற்றும் 2 வருட டெபாசிட்டுகளுக்கு 5.7% வட்டியை வழங்குகிறது.
அதேபோல், 3 ஆண்டு வைப்புத்தொகைக்கு 5.8% வட்டியும், 5 ஆண்டு வைப்புத்தொகைக்கு 6.1% வட்டியும் வழங்குகிறது. 10 வருட FDகளுக்கு, ஹெச்.டி.எஃப்.சி., வங்கி 6% வட்டியை வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
ஐசிஐசிஐ வங்கி நிலையான வைப்பு விகிதம்
அக்டோபர் 18, 2022 முதல் ஐசிஐசிஐ வங்கி FD வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. ரூ. 2 கோடிக்குக் குறைவான டெபாசிட்களுக்கு, ஐசிஐசிஐ வங்கி 1 வருட டெபாசிட்டுக்கு 5% வட்டியும், 2 வருட FDக்கு 5.8% வட்டியும் வழங்குகிறது.
தொடர்ந்து, 3 வருட வைப்புத்தொகைக்கு 6% வட்டியும், 5 வருட வைப்புத்தொகைக்கு 6.2% வட்டியும் வழங்குகிறது.
10 வருட FDகளுக்கு, ICICI வங்கி 6.1% வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு ஐசிஐசிஐ வங்கி கூடுதலாக 0.5% வட்டி வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil