ஜியோ, ஏர்டெல், வோடபோன் வரிசையில் இப்போது பிஎஸ்என்எல்!

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே அதிகரித்து வரும் போட்டியின் அடுத்த நடப்பாக, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ம் இப்போது களமிறங்கியுள்ளது.

ஆர்.சந்திரன்

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே அதிகரித்து வரும் போட்டியின் அடுத்த நடப்பாக, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ம் இப்போது களமிறங்கியுள்ளது. இதற்காக, “கூல் (KOOL)”என பெயரிடப்பட்டுள்ள புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.

மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தம் 4ஜி பிரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி, 1.5 ஜிபி டேட்டா இலவசம் என கூறிக் கொண்டிருக்கையில், பிஎஸ்என்எல் தனது பிரிபெய்ட் வாடிக்கையாளர்களிடம் “வரம்பு எதுவும் இல்லை. இஷ்டம் போல் அனுபவி ராஜா” என்கிறது. இதற்காக பிப் 8ம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள “கூல் (KOOL)”திட்டம் 84 நாட்கள் கால அவகாசம் கொண்டது. இத்திட்டத்திற்கு 1099 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ள பிஎஸ்என்எல் இலவச டேட்டாவுடன், லோக்கல் மற்றும் ரோமிங் வசதியுடன் காலவரம்பு இன்றி கைப்பேசியில் பேசவும், தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பவும் அனுமதிக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம், தனது லேண்ட்லைன் சேவையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வழங்கி வந்த இலவச தொலைபேசும் சேவையை அண்மையில் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்தான் முதன்முதலில் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் இணைந்த பேக்கேஜ் திட்டத்தைத் தொடங்கியது. அதன்மூலம் தனது 4ஜி வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா இலவசம் என்றது. இதனால் தனது வாடிக்கையாளர்களை இழக்கும் சூழலைத் தவிர்க்க ஏர்டெல் களமிறங்க, வேறுவழியில்லாத வோடபோனும் அண்மையில் இணையான திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. இப்போது பொதுத்துறையின் பிஎஸ்என்எல்-ம் கோதாவில் இறங்க போட்டி இன்னும் சூடாகி உச்சத்தை நோக்கி பயணிக்கிறது.

Key words :

முக்கிய சொற்கள் :

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close