6 மாதங்களுக்கு இலவச காலிங் சேவையை அறிவித்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம்!

நேரடியாக ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ரூ999 திட்டத்துடன் போட்டியாக களத்தில் இறங்குகிறது

சமீப காலமாக அதிரடியான ஆஃபர்களை அள்ளி வழங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம், தற்போது 6 மாதங்களுக்கு அளவில்லாத வாய்ஸ் கால்ஸ் சேவையை துவக்கியுள்ளது.

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல், போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர், இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள ஏர்டெல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில், வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றன.

வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள, ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டா ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள், ஷாப்பிங் கூப்பன்கள் என டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களை அள்ளி தருவது வழக்கமாக மாறி வருகிறது. அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 999 பேக்கில் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.

மகா சிவராத்திரி பண்டிகையை ஓட்டி, வெளியிட்டுள்ள இந்த ஆஃபரில், ரூ 999 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 6 மாதங்களுக்கு அளவற்ற வாய்ஸ் கால்ஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுஞ்செய்திகளையும் உபயோகித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா தீர்ந்து விட்டால், அதன் வேகம் குறைக்கப்பட்டு 40kbpsல் டேட்டா வழங்கப்படுமாம். இதன் மூலம் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ’

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய ஆஃபர், நேரடியாக ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ரூ999 திட்டத்துடன் போட்டியாக களத்தில் இறங்குகிறது. ஆனால், இந்த இரண்டு நிறுவனங்களும் வழங்குவதை விட, பிஎஸ்என்எல் சற்று அதிகப்படியான ஆஃபரை வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close