BSNL Prepaid Recharge Plans: நாட்டின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்,எல்) நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், வசந்தம் கோல்டு பிவி-96 என்ற ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
180 நாட்கள் வேலிடிட்டி உள்ள இந்த ரீசார்ஜ் திட்டத்தில் முதல் 21 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள், எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பும் வசதி உள்ளிட்ட வசதிகளை அளிக்கிறது.
21 நாட்களுக்கு பிறகு அழைப்புகளுக்கு வினாடி வீதம் காசு வசூலிக்கப்படும். கிரேஸ் பீரியடாக 165 நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின் PLAN VOICE96 என்று 123 என்ற எண்ணிக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், மீண்டும் இந்த திட்டம் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல், சமீபத்தில் தனது ரீசார்ஜ் பிளான்களுக்கு அக்டோபர் மாதம் வரை தினமும் 2.2 ஜிபி இன்டர்நெட் வசதியை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.