Advertisment

ரூ. 7லட்சத்துக்கு 2-nd ஹேண்ட் கார் வாங்குறீங்களா? உங்க இ.எம்.ஐ இதுதான்!

ஆனால் நினைவில் கொள்ளுங்கள், புதிய கார்களைக் காட்டிலும் பயன்படுத்திய கார்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி மிகவும் அதிகம்.

author-image
WebDesk
New Update
கம்மி வட்டியில் பர்சனல் லோன், கார் லோன்: SBI தீபாவளி ஆஃபர் பாத்தீங்களா?

Buying a used car this festive season : ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது மக்கள் புதிய பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில நேரங்களில் பொதுவாக ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ துறைகளில் பல்வேறு நிறுவங்கள் மக்களுக்காக அதிக சலுகைகளை வழங்குவார்கள். இந்த ஆண்டு பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் பல சலுகைகளை அறிமுகம் செய்துள்ளனர்.

Advertisment

இந்த விழாக்காலத்தில் விலை அதிகமாக இருக்கின்ற காரணத்தால் உங்களால் கார் வாங்க இயலவில்லை என்ற வருத்தம் இருக்கின்ற பட்சத்தில், பயன்படுத்திய, நல்ல நிலையில் உள்ள கார்களை வாங்க முடியும், கொரோனா காலத்தில் பயன்படுத்திய காரின் பயன்பாடு அளவுக்கு அதிகமாக இருந்ததை நம்மாள் கண்கூடாக காண முடிந்தது.

நீங்கள் கார்களை வாங்குவதற்கு முன்பு நீங்கள் அதற்கான பணத்தை எப்படி ரெடி செய்யப் போகின்றீர்கள்? அதற்கான பணம் உங்களிடம் உள்ளாதா என்பதை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். தற்போது பல்வேறு நிறுவனங்களும் வங்கிகளும் பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கு வங்கிக் கடன்களை வழங்குகின்றன.

publive-image

ஆனால் நினைவில் கொள்ளுங்கள், புதிய கார்களைக் காட்டிலும் பயன்படுத்திய கார்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி மிகவும் அதிகம்.

எனவே நீங்கள் யூஸ்ட் காருக்கான லோனை வாங்க திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால் பல நிறுவனங்கள் வழங்கும் வட்டி மற்றும் இ.எம்.ஐ. கட்டணங்களை ஒப்பிட்டு பாருங்கள். 8 முதல் 10 வருடங்களுக்கு முன்பு வாங்கி பயன்படுத்திய கார்களுக்கு வங்கிகள் கடன்கள் வழங்குவதில்லை. மூன்று வருடங்கள் முதல் 5 வருடங்களுக்குள் வாங்கிய கார்களுக்கு மட்டுமே கடன்களை வழங்க்கின்றனர். சில கடன் வழங்கும் நிறுவனங்கள் வாகனங்களுக்கான மதிப்பில் 75 முதல் 85% வரையில் கடன்களை வழங்குகின்றனர்.

ஒவ்வொரு வங்கியும், கடன் வழங்கும் நிறுவனங்களும் இந்த கடனை பெறுவதற்கு சில வரம்புகளை வைத்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 19 வங்கிகளில் பயன்படுத்திய கார்களுக்கான கடனங்களை வழங்குகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 7 லட்சம் கடனுக்கு கார் ஒன்றை வாங்கினால் அதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணை எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment