Advertisment

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு - அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

Dearness Allowness Update : மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு - அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

Dearness Allowance (DA) Hike Update : மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அகவிலைப்படி (டிஏ) (Dearness Allowness) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (டிஆர்) (Dearness Relief) ஆகியவற்றை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

Advertisment

இதற்கு முன்பு 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படி விகிதம் தற்போது 11 சதவீதம் உயர்த்தப்பட்டு 28 சதவீதமாக அதிரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும், என்றும் இதன் மூலம் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும்,  65.26 லட்சம் அரசு ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று என்று அமைச்சர் கூறினார்.

தற்போதுவரை, மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தில் 17 சதவீத டி.ஏ ஆக உள்ளது. இதில்  கடந்த ஆண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கான  டி.ஏ.வை 4 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, இது 2021 ஜனவரி 1 முதல் அமல்படுத்த இருந்த நிலையில், கடந்த ஆண்டு, ஏப்ரல்- இல், தொற்றுநோய் அதிகரித்ததன் காரணமாக  நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது இந்த டிஏ மற்றும் டிஆர் தவணைகள் ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020, ஜனவரி 1, 2021, மற்றும் ஜூலை 1, 2021 ஆகிய நான்கு காலகட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஆனாலும் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை டிஏ மற்றும் டிஆர் விகிதம் 17 சதவீதமாக இருக்கும் என்று தாக்கூர் கூறினார்.

"ஜனவரி 1, 2020 முதல் 30 ஜூன் 2021 வரையிலான காலத்திற்கான அகவிலைப்படி விகிதம் 17 சதவீதமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment