Advertisment

கனரா வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகை!

7.50 சதவீத வட்டி விகித லாபத்தினையும் கனரா வங்கி அளிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கனரா

கனரா

பொதுவாக மக்கள் பணத்தை வருங்காலத்திற்காக சேர்ப்பது வங்கியில் தான்.

Advertisment

இது வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதிக்கேற்ப வங்கிகள் மாறுபடலாம். அதே போல் வங்கிகளில் கணக்கு தொடரும் பலரும் தொடர இருக்கும் சேமிப்பு கணக்குகள்,

பிக்சட் டெபாசிபட், வீட்டுக்கடன் போன்றவற்றிற்கு எவ்வளவு சலுகைகள் தருகின்றன, எந்த மாதிரியான வசதிகளை ஏற்படுத்தி தருகின்றன போன்றவற்றை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில், மக்களுக்கு உதவும் வகையில் நாள்தோறும் வங்கி சேவைகள் மட்டும் திட்டங்கள் குறித்து பல செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து கனரா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதம் குறித்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

பொதுத் துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி 2018 நவம்பர் 1 முதல் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.

ஒரு கோடி ரூபாய் வரையில் 1 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது புதிய வட்டி உயர்வின் படி பொதுப் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.50 சதவீத வட்டி விகித லாபத்தினையும் கனரா வங்கி அளிக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment