Advertisment

ஹாப்பியோ ஹாப்பி... கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு செம்ம நியூஸ்!

author-image
WebDesk
New Update
home loan home loan interest home loan

home loan home loan interest home loan

canarabank netbanking canara bank: ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பாக முதலீடு செய்து வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பாரம்பரியமாகவே சிறந்த சாய்ஸாக இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தில், ரெபோ விகிதம் குறைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி குறையாது.

Advertisment

கனரா வங்கியின் (Canara Bank) கூற்றுப்படி, இந்த அதிகரிப்புக்குப் பிறகு, குறைந்தது 2 வருட Fixed Deposit மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறைவான மெச்யூரிட்டி உள்ள FD-களுக்கு இப்போது 5.4 சதவீத வட்டி கிடைக்கும். முன்னதாக இந்த வட்டி விகிதம் 5.2 சதவீதமாக இருந்தது. இது தவிர, 3 முதல் 10 ஆண்டுகள் மெச்யூரிட்டி உள்ள FD-களில் வட்டி விகிதம் 5.3 சதவிகிதத்திலிருந்து 5.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூத்த குடிமக்களுக்கு திருத்தப்பட்ட கட்டணத்தில் அரை சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படும். புதிய கட்டணங்கள் நவம்பர் 27 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. வட்டி விகிதங்களில் திருத்தத்திற்குப் பிறகு 2 முதல் 10 ஆண்டுகள் முதிர்வு காலம் வரையிலான நிலையான வைப்புகளுக்கு கனரா வங்கி பொதுத்துறை வங்கிகளிடையே அதிக வட்டி அளிக்கிறது.

இப்புதிய வட்டி விகிதங்கள் நவம்பர் 27ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே இப்புதிய வட்டி விகிதங்கள் பொருந்தும்.

புதிய வட்டி குறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்துக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 5.40% வட்டி வழங்கப்படும். இதே காலகட்டத்துக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு 5.90% வட்டி வழங்கப்படும்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment