Advertisment

வருஷத்தோட முதல் வாரமே ஹாப்பி நியூஸ் தான்.. காய்கறி விலை எதிர்பார்த்ததை விட குறைவு!

கடந்த இரண்டு வாரங்களாகவே தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல்

author-image
WebDesk
New Update
carrot beans tamil onion tamil

carrot beans tamil onion tamil

carrot beans tamil onion tamil : 2021ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சென்னையில் கடந்த மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை ஏறவும் இறங்கவுமாகவே இருக்கிறது. ஒரு நாள் உயர்ந்தால் ஒரு நாள் வீழ்ச்சியடைகிறது. ஆனாலும் கடந்த இரண்டு வாரங்களாகவே தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. மற்ற காய்கறிகளின் விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில், இன்று விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது.

Advertisment

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஜனவரி 1) ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முருங்கைக்காய் விலை 80 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கு வந்துள்ளது. அவரைக்காய் விலை நேற்று 30 ரூபாயிலிருந்து இன்று 20 ரூபாயாகக் குறைந்துள்ளது. பீன்ஸ் விலை 25 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகக் குறைந்துள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.15

வெங்காயம் - ரூ.25

அவரைக்காய் - ரூ.20

பீன்ஸ் - ரூ.20

பீட்ரூட் - ரூ.10

வெண்டைக்காய் - ரூ.20

நூக்கல் - ரூ.18

உருளைக் கிழங்கு - ரூ.15

முள்ளங்கி - ரூ.8

புடலங்காய் - ரூ.20

சுரைக்காய் - ரூ.20

பாகற்காய் - ரூ.25

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment