Advertisment

கொரோனாவால் ஏற்பட்ட பண நெருக்கடி : அதிகரித்த தங்க நகை கடன்

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தால் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் மூலமாக தங்கக் நகை கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என WGC தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold loan

கொரோனா தொற்று, ஊரடங்கு போன்ற காரணங்களால் பணநெருக்கடி மற்றும் எதிர்பாராத செலவுகள் அதிகரித்துள்ளதால் மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. மே 2021 உடன் முடிவடைந்த 12 மாதங்களில் அனைத்து துறைகளிலும் கடன் வளர்ச்சியை 33.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Advertisment

வங்கிகளின் தங்க நகை கடன் நிலுவை ரூ.15,686 கோடி அதிகரித்து ரூ.62,101 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 மே மாதத்தில் ரூ .46,415 கோடியாக இருந்தது என ஆர்பிஐ வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றன. மார்ச் 2020 முதல் கொரோனா பரவல் ஆரம்பித்திலிருந்து, நகைக் கடன் நிலுவை 86.4 சதவீதம் அல்லது 2021 மே மாதத்திற்குள் ரூ .33,308 கோடியாக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை வங்கிகளின் நிலவரம் மட்டுமே.

முத்தூட் நிதி மற்றும் மணப்புரம் நிதி போன்ற தங்கக் நகை கடன் நிறுவனங்களால் நீட்டிக்கப்பட்ட கடன்களை சேர்த்தால், நிலுவையில் உள்ளவை மிக அதிகமாக இருக்கும். கடன் பெறுவது எளிதானது என்பதால் தங்கக் நகை கடன் பிரிவு வங்கிகளின் முக்கிய வளர்ச்சிப் பகுதியாக உருவெடுத்துள்ளது என தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் அதிகாரி தெரிவிக்கிறார். முன்னதாக நகை கடன்களில் அதிக அக்கறை காட்டாத பொதுத்துறை வங்கிகள் தற்போது ஒரு பெரிய வளர்ச்சியை கண்டறிந்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தங்க நகை கடன்கள் 465 சதவீதம் உயர்ந்து ரூ .20,987 கோடியாக உள்ளது. தங்க நகை கடனுக்கான அதிக தேவை கிராமப்புறங்கள், குறைந்த வருமானம் கொண்ட குழு மற்றும் மைக்ரோ யூனிட்களில் உள்ளது. எஸ்பிஐ 7.50 சதவீத வட்டி விகிதத்தை வசூலிக்கிறது.

நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தங்கத்தை வைத்து கடன் வாங்குவது இந்திய தங்கச் சந்தையில் எப்போதும் இல்லாத அம்சமாகும். இந்தியாவில் உள்ள குடும்பங்கள் உடல்நலம், கல்வி மற்றும் திருமணத்திற்கான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நகை கடன்களைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் சிறு வணிகங்கள் அவற்றின் மூலதனத் தேவைக்கு அவற்றைப் பயன்படுத்துகின்றன என்று உலக தங்க நகை கவுன்சில் அறிக்கை கூறுகிறது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தால் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் மூலமாக தங்கக் நகை கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என WGC தெரிவித்துள்ளது. இதனால் நிலுவையில் உள்ள கடன்கள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 நிதியாண்டில் ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 800 கோடியிலிருந்து 2021 நிதியாண்டில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 100 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் தங்க நகை கடன் NBFC களின் வளர்ச்சியில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது.

மணப்புரம் பைனான்ஸில், முந்தைய ஆண்டில் ரூ.168,909.23 கோடியிலிருந்து மொத்த நகை கடன் வழங்கல் ரூ .263,833.15 கோடியாக உயர்ந்தது. மார்ச் 31, 2021 நிலவரப்படி, அதன் நேரடி நகை கடன் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 25.9 லட்சமாக இருந்தது. தங்கத்தின் விலையில் 10-12 சதவீதம் சரிவு இருந்தபோதிலும், முத்தூட் பைனான்ஸ் கடன் புத்தகத்தை காலாண்டில் நான்கு சதவீதம் உயர்த்த முடிந்தது. கொரோனா 2வது அலையில் வாடிக்கையாளர்களின் பணத் தேவை அதிகரிப்பதால் கடன் தேவை அதிகமாக இருக்கும். 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மனப்புரம் நிதி 404 கோடி ரூபாய் தங்கத்தை ஏலம் எடுத்தது, இது 2021 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் நடைபெற்ற வெறும் எட்டு கோடி மதிப்புள்ள தங்க ஏலங்களுக்கு எதிராக, கடன் வாங்குபவர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தத்தைக் குறிக்கிறது.

இதற்கிடையில், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, 2021 மே மாதத்தில் 10.3 சதவீத விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்தன, இது 2020 மே மாதத்தில் 5.2 சதவீதமாக இருந்தது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது,

2020 மே மாதத்தில் 1.7 சதவீதத்திலிருந்து 2021 மே மாதத்தில் தொழில்துறைக்கான கடன் வளர்ச்சி 0.8 சதவீதமாகக் குறைந்தது. நடுத்தர தொழில்களுக்கான கடன் 2021 மே மாதத்தில் 45.8 சதவீத வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 5.3 சதவீதமாக இருந்தது. மைக்ரோ மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் வளர்ச்சி 2021 மே மாதத்தில் 5.0 சதவீதமாக அதிகரித்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 3.4 சதவீதமாக இருந்தது, ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, ஒரு வருடத்திற்கு முன்பு 2.8 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, ​​2021 மே மாதத்தில் பெரிய தொழில்களுக்கான கடன் 1.7 சதவீதமாக சுருங்கியது.

சேவைத் துறையின் கடன் வளர்ச்சி 2020 மே மாதத்தில் 10.3 சதவீதத்திலிருந்து 2021 மே மாதத்தில் 1.9 சதவீதமாகக் குறைந்தது, NBFC கள், போக்குவரத்து ஆபரேட்டர்கள் மற்றும் வணிக ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடன் வளர்ச்சி குறைந்து வருவது முக்கிய காரணம். வாகனக் கடன்களின் விரைவான வளர்ச்சி மற்றும் கிரெடிட் கார்டு நிலுவையில் இருப்பதால் தனிநபர் கடன்கள் 2021 மே மாதத்தில் 12.4 சதவீத விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்தன, இது ஒரு வருடத்திற்கு முன்பு 10.6 சதவீதமாக இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Reserve Bank Of India Gold Loan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment