Advertisment

Bank News: உடனே மாற்றுங்க... இந்த வங்கிகளின் 'செக் புக்' இனி செல்லாது!

மூன்று வங்கிகளின் காசோலை புத்தகம் மற்றும் எம்ஐசிஆர் குறியீடு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
cheque book

பஞ்சாப் நேஷனல் வங்கி கூறுகையில், "அக்டோபர் 1, 2021 முதல், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (UBI) ஆகியவற்றின் பழைய காசோலை புத்தகங்கள் பயன்பாட்டில் இருக்காது.  OBC,UBI இன் பழைய காசோலை புத்தகத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் மாற்றவும். இந்த காசோலை புத்தகம் PNB-யின் அப்டேட் செய்யப்பட்ட IFSC குறியீடு மற்றும் MIRC உடன் வரும்.

Advertisment



புதிய காசோலை புத்தகத்தை (Cheque Book) பெற, சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளை அணுகலாம் அல்லது ஏடிஎம், இன்டர்நட் பேங்கிங், என்பி ஒன், அதிகாரப்பூர்வ கஸ்டமர் கேர் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஏதேனும் உதவி அல்லது தகவல்களை பெற கட்டணமில்லா எண் 1800-180-2222 ஐ தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களானது கடந்த 2020 ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (PNB) இணைக்கப்பட்டதன் காரணமாக அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கூடுதல் மாற்றங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக சில்லறை பொருட்களின் அனைத்து சேவை கட்டணங்களையும், பிராசஸிங் கட்டணங்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, வங்கி வீட்டுக் கடனுக்கு 6.80 சதவிகிதமும், கார் கடனுக்கு 7.15 சதவிகிதமும் போன்ற கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் அடுத்த மாதம் முதல் வழங்குகிறது.



இந்த கட்டணம் ரத்து அறிவிப்பானது, வீட்டுக்கடன், வாகனக் கடன், சொத்துக்கடன், ஓய்வூதியக் கடன், தனிநபர் கடன் மற்றும் தங்கக் கடன்கள் போன்ற சில்லறை பொருட்களின் அனைத்து சேவை கட்டணங்கள், பிராசஸிங் கட்டணங்களுக்குப் பொருந்தும்.வீட்டுக்கடன் குறிப்பாக சிறந்த வட்டி வீகிதத்தில் வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இந்த வசதிகள் மற்றும் சலுகைகள் டிசம்பர் 31, 2021 வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலகாபாத் வங்கி காசோலை புத்தகமும் செல்லாது



மேற்கூறிய வங்கிகளால் மாற்றப்பட்டதைப் போலவே, அலகாபாத் வங்கியும் அடுத்த மாதம் முதல் அதன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான காசோலை புத்தகங்கள் மற்றும் MICR குறியீட்டை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளையில் இருந்து புதிய காசோலை புத்தகங்களைப் பெறலாம். இது தவிர, வாடிக்கையாளர்கள் இணைய வங்கி (Internet Banking/Online Banking) அல்லது மொபைல் பேங்கிங் (Mobile Banking) மூலமும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank News Punjab National Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment