Advertisment

CIBIL Score; சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் தனிநபர் கடன் பெறலாம்; விவரங்கள் இதோ…

CIBIL Score: Can you get a personal loan with a low credit score?: சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் தனிநபர் கடன் வாங்க முடியுமா?; விவரங்கள் இதோ…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
loan, scams, பண மோசடி

கடன் வாங்குவது அல்லது கடனில் பொருட்களை வாங்குவது நமக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும். இருப்பினும் வீடு, கார் அல்லது உயர்கல்வி போன்ற மூலதன சொத்துக்களை அடைய நாம் கடன் வாங்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் கடன் வாங்க ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிப்பது அவசியம். அதன் மூலம் எப்போது வேண்டுமானாலும், கவர்ச்சிகரமான விகிதத்தில் எளிதாக கடன் பெறலாம்.

Advertisment

கடன் தகவல் பணியகம் (இந்தியா) லிமிடெட் (சிபில்) என்பது, கடன் தகுதியை பாதிக்கும் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் கடன் மதிப்பெண்களை (சிபில் ஸ்கோர்) பராமரிக்கும் நிறுவனம் ஆகும்.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க இந்தியாவில் சிறந்த சிபில் மதிப்பெண் என்ன?

சிறந்த வட்டி விகிதங்களைப் பெறுவதற்கு சிறந்த சிபில் மதிப்பெண் 550 க்கு மேல் இருக்க வேண்டும். அப்போதுதான் அதிகமான தொகையை கடனாக வாங்க முடியும்.

சிபில் மதிப்பெண்கள் மற்றும் கடன் ஒப்புதல்கள் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன?

சிபில் ஸ்கோர் கடன் வழங்குபவருக்கான முக்கிய அண்டர்ரைட்டிங் முடிவுக் காரணியாக செயல்படுகிறது, அதிக மதிப்பெண் இருந்தால், கடன் ஒப்புதல் பெறுவதற்கான உங்கள் வாய்ப்புகள் சிறந்ததாக இருக்கும்.

சிபில் ஸ்கோர் என்பது கடன் வரலாறு சுருக்கமாகும், இது சிபில் அறிக்கையில் 'கணக்குகள்' மற்றும் 'விசாரணைகள்' பிரிவுகளில் காணப்படும் விவரங்களைப் பயன்படுத்தி பெறப்பட்டது. சிபில் மதிப்பெண் 300 - 900 வரை மாறுபடலாம். உங்கள் மதிப்பெண் 900 க்கு நெருக்கமாக இருந்தால், உங்கள் கடன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடந்த காலக் கடன்களில் DPD (பணம் செலுத்துதல்) அல்லது தீர்வு போன்ற ஏதேனும் நடந்திருந்தால் அதனை சிபில் ஸ்கோர் பிரதிபலிக்கிறது. இந்த அறிக்கை வாடிக்கையாளரின் நிதி தன்மையை மதிப்பீடு செய்ய உதவுகிறது.

உங்களிடம் குறைந்த சிபில் மதிப்பெண் இருந்தால் தனிநபர் கடன் பெற முடியுமா?

உங்களிடம் மோசமான சிபில் மதிப்பெண் இருக்கும்போது, ​​தனிநபர் கடன் பெறுவது சவாலாக இருக்கலாம், அதுவும் குறிப்பாக முக்கிய கடனளிப்பவர்களிடமிருந்து (பெரிய வங்கிகளிடமிருந்து). CIBIL ஒரு வாடிக்கையாளரின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கான சிறந்த வழியாகும். தனிநபர் கடன் ஒரு பாதுகாப்பற்ற கடன் என்பதால், சிபில் மதிப்பெண் கடன் வழங்குபவருக்கு மிகவும் முக்கியமானதாகிறது.

எனினும், குறைவான சிபில் மதிப்பெண் இருந்தும் தனிநபர் கடனை வழங்கக்கூடிய புதிய கடன் வழங்குபவர்கள் நிறைய உள்ளனர். அவர்கள் அதிக வட்டி விகிதம் வசூலிக்கலாம். மேலும், குறைந்த காலம் மற்றும் குறைந்த கடன் தொகைக்கு கடன் வழங்கலாம். 10k-50k வரம்பில் குறுகிய கால தனிநபர் கடன்களை வழங்கும் பல பின்டெக்குகள் உள்ளன. குறைந்த சிபில் மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்வதில் அவர்கள் இன்னும் கொஞ்சம் நெகிழ்வானவர்களாக இருக்கலாம். இந்த ஃபின்டெக் நிறுவனங்கள் சில மாற்றுத் தரவுகளையும் பயன்படுத்துகின்றன. உங்கள் பணப்புழக்கம் மற்றும் கடன் நடத்தை மதிப்பீடு செய்ய உங்கள் மொபைலின் எஸ்எம்எஸ்களை அந்த நிறுவனங்கள் கண்காணிக்கின்றன. ஒரு சில ஃபின்டெக் நிறுவனங்கள் குறைந்த CIBIL மதிப்பெண் பெற்ற நுகர்வோருக்கு தனிநபர் கடன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, ஏனெனில் அவர்கள் இந்த பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு வலுவான கடன் மதிப்பீட்டு முறையைக் கொண்டுள்ளனர்.

குறைந்த சிபில் விண்ணப்பதாரர்களுக்கு தனிநபர் கடன் பெறுவதற்கான சில குறிப்புகள்?

டிஜிட்டல் கடன் வழங்குபவர்கள், குறைந்த சிபில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கடன் வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களின் சிபில் மதிப்பெண்ணை அதிகரிக்கவும் உதவுகின்றனர். வழக்கமாக பாரம்பரிய வங்கிகள் புதிதாக கடன் வாங்குபவர்கள் அல்லது ஒருமுறை செய்த தவறால் மோசமான மதிப்பெண் பெற்ற மக்களுக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்காது. ஆனால் டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதன் மூலம், கடன் வாங்கும் செயல்முறை மற்றும் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துதலால் அவர்களின் கடன் மதிப்பெண்களை உயர்த்தலாம். அதே சமயத்தில் தனிநபர் மிகுந்த அழுத்தத்தை அனுபவிப்பதற்குப் பதிலாக சிறிய அளவிலான கடன்களை எடுத்து இதை முயற்சி செய்ய வேண்டும், டிஜிட்டல் கடன் வழங்குபவர்களால் பாதுகாப்பற்ற பணக் கடன்கள் தரப்படும். அதேநேரம் வங்கிகளை விட அதிக வட்டி வசூலிக்கப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment