Advertisment

'இனி பணமும் நேரமும் மிச்சம்': சென்னை டூ புதுச்சேரி சரக்கு கப்பல் சேவை தொடக்கம்

சென்னை முதல் புதுச்சேரி வரை சரக்கு கப்பல் சேவை இன்று தொடங்கியது. இதனால், பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதோடு கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்கும் என நம்பப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Commencement of Chennai to Puducherry cargo ship service Tamil News

காரைக்கால்- இலங்கை கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும்.. புதுச்சேரி அமைச்சர் தகவல்

பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Advertisment

சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து கப்பலில் வரும் கண்டெய்னர்கள் ஏற்றி இருக்க மற்றும் டெலிவரி செய்வதில் இடம் பற்றாக்குறை காரணமாக காலதாமதம் வந்தது. இதை சரி செய்ய 100 கண்டெய்னர்களை மட்டும் கப்பல் மூலம் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து இங்கிருந்து டெலிவரி செய்வது குறித்து இரண்டு துறைமுகங்களும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தப் பணிக்காக குளோபல் லாஜிஸ்ட் சொல்யூஷன் என்ற தனியார் நிறுவனத்தின் 104 கண்டெய்னர்களே ஒரே நாளில் ஏற்றிச்செல்லும் சிறப்புரக கப்பல் கேரளா மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு கடந்த 11ஆம் தேதி வந்தது.

இந்த கப்பல் கடந்த 15 நாட்களாக உப்பளம் துறைமுகம் வளாகத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றி வர புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்கிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னையில் இருந்து கன்டெய்னர்களை கொண்டு வந்து புதுச்சேரியில் இறக்கி வைத்துவிட்டு புதுச்சேரியில் இருந்து அவற்றை சென்னைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட உள்ளது.

publive-image

இதையொட்டி மேலும் தமிழகத்தின் மையப் பகுதியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படும் உதிரி பாகங்களாகட்டும் சென்னையில் தயாரிக்கப்படும் பொருட்கள் தென் மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதிலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் சென்னை முதல் புதுச்சேரி இடையே வாரம் இருமுறை சரக்கு கப்பல் சேவை இன்று முதல் தொடங்கியது.

publive-image

2017 ஆம் ஆண்டில் சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சரக்கு கப்பல் இயக்குவதற்கான துறைமுக அமைப்பு சரக்குகளை கையாளும் இயந்திரம் போன்றவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 67 மீட்டர் நீளம் கொண்ட சரக்கு கப்பல் வாரத்திற்கு இருமுறை சென்னை புதுச்சேரி இடையே இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவை மூலம் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்கும் என நம்பப்படுகிறது.

publive-image

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Chennai Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment