Advertisment

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணம் எடுக்க அனுமதி - முழு விவரம் இங்கே

NPS: அடல் ஓய்வூதிய யோஜனா (APY) சந்தாதாரர்களுக்கு ஓரளவு பணம் திரும்பப் பெறும் வசதி பொருந்தாது என்று பி.எஃப்.ஆர்.டி.ஏ தெளிவுபடுத்தியது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணம் எடுக்க அனுமதி - முழு விவரம் இங்கே

National Pension System: தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்) இன் கீழ் அனைத்து பங்குதாரர்கள் மற்றும் சந்தாதாரர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், "கோவிட் -19 ஐ ஒரு தொற்றுநோயாக அறிவித்த இந்திய அரசின் முடிவை கருத்தில் கொண்டு, கோவிட்-19 இயற்கையில் உயிருக்கு ஆபத்தான ஒரு முக்கியமான நோயாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

COVID-19 சிகிச்சை தொடர்பான செலவுகளை ஈடுகட்ட NPS சந்தாதாரர்கள் ஓரளவு பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கொரோனா நிவாரணம்: அரசு சலுகையை அப்படியே வழங்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி

சந்தாதாரரின் மனைவி, குழந்தைகள், சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தை அல்லது சார்புடைய பெற்றோர் உட்பட அனைவருக்கும் சிகிச்சையளிப்பதற்காக ஓரளவு பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அடல் ஓய்வூதிய யோஜனா (APY) சந்தாதாரர்களுக்கு ஓரளவு பணம் திரும்பப் பெறும் வசதி பொருந்தாது என்று பி.எஃப்.ஆர்.டி.ஏ தெளிவுபடுத்தியது.

"தற்போது, APY இன் கீழ் சந்தாதாரர்கள் ஓரளவு பணம் திரும்பப் பெறுவதற்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்று PFRDA மேலும் கூறியது. NPS மற்றும் APY ஆகியவை PFRDAல் நடத்தப்படும் இரண்டு முதன்மை ஓய்வூதிய திட்டமாகும். என்.பி.எஸ் என்பது மத்திய, மாநில அரசுகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கானது என்றாலும், ஏபிஒய் என்பது முக்கியமாக ஒழுங்கமைக்கப்படாத துறையில் பணியாற்றுவோரின் ஓய்வூதிய தேவைகளை பூர்த்தி செய்வதாகும்.

கோரோனா இந்தியாவின் எதிர்காலத்தில் பிசாசு போல தொங்குகிறது; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

இந்தியாவின் பெரும்பான்மையான தொழிலாளர்கள் அமைப்புசாரா துறையில் பணியாற்றுகின்றனர். மார்ச் 31 நிலவரப்படி, NPS மற்றும் APY இன் கீழ் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 3.46 கோடியாக இருந்தது. இதில், பி.எஃப்.ஆர்.டி.ஏவின் தரவுகளின்படி, APY சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.11 கோடியாக இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment